சிங்கப்பூருக்கு அதிகளவில் பங்களித்துள்ள தமிழர்கள்

தமிழ்ச் சமூகம் சிங்கப்பூருக்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் குமாரி இந்திராணி ராஜா பாராட்டியுள்ளார்.

எண்ணிக்கையில் சிறிய அளவினரான தமிழர்கள் சிங்கப்பூர் வாழ்க்கையின் அனைத்து பிரிவுகளிலும் அளப்பரிய பங்கை ஆற்றியுள்ளனர். கல்வி, கலை, அரசியல், நிபுணத்துவம் என பல்வேறு வழிகளிலும் இந்த நாட்டில் தமிழர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்று குமாரி இந்திராணி கூறினார்.

இந்தியர், சீனர், மலாய்க்காரர்கள் என பல சமூகத்தினர் வாழும் சிங்கப்பூரில் பல்வேறு உட்சமூகங்களும் உள்ளன. இந்திய சமூகத்துக்குள்ளேயே பல்வேறு சமூகங்கள் உள்ளன. ஒவ்வொரு சமூகமும் ஒரு தனிச்சிறப்பைக் கொண்டு மிளிர்வதால் பல்வேறுபட்ட சமூகங்களால் சிங்கப்பூர் சமூகம் வலிமை பெற்றுள்ளது.

இதில் தமிழ்ச் சமூகமும் சிங்கப்பூருக்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளது என்றார் கல்வி, நிதி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி. சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் தொகுத்துள்ள ‘சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர்’ நூலை அவர் நேற்று வெளியிட்டுப் பேசினார்.

“இந்த 2019ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு சிறப்பான ஆண்டு. இது நவீன சிங்கப்பூர் நிறுவப்பட்ட இருநூறாவது ஆண்டு, இந்தத் தீவின் 700வது ஆண்டு. ஒரு நாடாக உருவானதை நினைவுகூர ஆண்டு முழுவதும் பல நிகழ்வுகளும் நடவடிக்கைகளும் இடம்பெற்றன. இந்த வரலாறு நமது முன்னோர்களின் பயணங்களையும் அவர்களது முயற்சிகளையும் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. தனித்தன்மையான சிங்கப்பூரர் மரபணுவை நமக்குத் தந்த பயணம் இது,” என்று அமைச்சர் விளக்கினார்.

“இந்த தனித்தன்மையான மரபணுவின் மையமாக பல விழுமியங்கள் உள்ளன. முதலாவதும் முதன்மையானதுமாகத் திகழ்வது மனஉறுதி. நேர்மை, நாணயம், வலிமையான சட்டம், கொள்கை அடிப்படையில் செயல்படுவது ஆகியவற்றால் சிறிய நாடாக இருந்தாலும் அனைத்துலக அரங்கில் வலுவான அடையாளத்தைக் கொண்டுள்ளோம்,” என்றார் அவர்.

இரண்டாவது பல இன, பல கலாசார, பல சமய சமூகக் கட்டமைப்பைப் பேணுவதில் நாம் கொண்டுள்ள கடப்பாடு என்ற குமாரி இந்திராணி, மூன்றாவதாக சிங்கப்பூரின் வெளிப்படைத் தன்மையைக் குறிப்பிட்டார். இது சிங்கப்பூர் பொருளியல் செழித்தோங்கவும் சிங்கப்பூரர்கள் பரந்த உலகப் பார்வை பெறவும் வழிவகுத்துள்ளது. இந்த விழுமியங்கள் நாம் யார் என்பதற்கான பொருளை வழங்குவதுடன் எதிர்காலப் பாதைக்கு வெளிச்சமாகவும் விளங்குகிறது என்றார்.

சிங்கப்பூர் இருநூற்றாண்டை நினைவுகூர பல அமைப்புகள், சமூகப் பங்காளிகள் துடிப்பான பங்காற்றியுள்ளனர். இந்த முயற்சிகள் வலுவான சமூக உணர்வை குறிப்பதுடன் சிங்கப்பூரின் எதிர்காலத்துக்கான பாதையை வகுக்க உதவுகின்றன. அந்த வகையில், சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர் நூல் நல்லதோர் எடுத்துக்காட்டு என்றார் அவர்.

சிங்கப்பூர் சமூகத்துக்கும் தமிழ்ச் சமூகம், மொழி, கலாசாரத்துக்கும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ள பல்வேறு சமூகங்கள், தனிமனிதர்களை நினைவுகூர்ந்து பெருமைப்படுத்துகிறது இந்த நூல் என்ற அவர், கலைமகள் தமிழ்ப் பள்ளிக்கு இலவச பள்ளிப் பேருந்து வழங்கிய சமூகத் தலைவரான பேருந்து நிறுவன உரிமையாளர் திரு சிவனாண்டி தேவர், மருத்துவத் துறைக்கும் சமூகத்துக்கும் பங்காற்றிய டாக்டர் உமா ராஜன் ஆகியோரைச் சுட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!