தமது முன்னாள் பள்ளி மாணவியை 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் சந்தித்த இளையர் ஒருவர் நான்கு மாதங்கள் கழித்து அப்போது 13 வயது நிரம்பிய அந்தச் சிறுமியைப் பாலியல் செயலில் ஈடுபடுத்த முயன்றார். ஆனால் அதற்கு அந்தச் சிறுமி சம்மதிக்கவில்லை.
பின்னர் மற்றொரு 13 வயது சிறுமியுடன் நட்பு பாராட்டி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அவருடன் அந்த இளையர் உடலுறவு கொண்டார். இந்தக் குற்றத்தைப் புரிந்த 17 வயது இளையருக்கு நேற்று 21 மாதம் நன்னடத்தைக் கண்காணிப்பு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவர் 150 மணி நேரம் சமூக சேவை செய்ய வேண்டும். அவரது நன்னடத்தையை உறுதிசெய்யும் வகையில் அவரது பெற்றோர் $5,000 பிணை உத்தரவாதம் தர வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தைக் கட்டிக்காக்கும் வகையில் குற்றம் புரிந்தவரின் பெயரை வெளியிட தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.