‘சமூக ஊடக சவால்களை எதிர்கொள்ள கல்வி முறை உருமாற வேண்டும்’

பொதுமக்களுக்கு தகவல்களை கொண்டு சேர்ப்பதில் சமூக ஊடகங்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதனால் ஏற்பட்டுள்ள சவால்களைச் சமாளிக்க கல்வி முறை உருமாற வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் அழைப்பு விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களின் பாதிப்புகளுக்கு  சமூகம் தீர்வு காண வேண்டிய சூழ்நிலையில் அதனை கல்வி முறை அங்கீரித்து இந்த மின்னிலக்க உலகில் இளையர்களிடன் மனப்போக்கில் மாற்றத்தை உருவாக்கி, திறன்களை வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தாார்.

சமூக ஊடகங்களுக்கு அப்பால் கல்வி முறை இரண்டு இதர சவால்களை எதிர்நோக்குவதாகவும் அமைச்சர் சொன்னார்.

“பல்கலைக் கழக பட்டம் மட்டுமே வெற்றிக்கு வழி என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்,” என்று கூறிய திரு ஓங், “வாழ்நாள் கற்றல் ஒரு அனுபவமாக இருக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார். மத்திய கிழக்கு சமுக, அரசியல் மாற்றங்கள் எனும் இரண்டு நாள் மாநாட்டின் முடிவில் அமைச்சர் ஓங் நேற்று மாலை பேசினார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் மத்திய கிழக்கு கல்வி நிலையம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆர்ச்சர்ட் ஹோட் டலில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த கல்வி நிலைய தலைவர்கள், கல்விமான்கள் பங்கேற்றனர்.

இதில் பேசிய திரு ஓங், மக்கள் கருத்துகளை வெளியிடுவதிலும் விமர்சிப்பதிலும் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை விவரித்தார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!