புக்கிட் பாத்தோக்கில் பொங்கல் கொண்டாட்டம்

அர்த்தமுள்ள பொங்கல் திருநாளைக் கொண்டாட அக்கம்பக்கத்தாருடன் ஒன்றுகூடியவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்று சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி, மனிதவள அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளருமான லோ யென் லிங் தெரிவித்தார்.

ஹில்வியூ சமூக மன்றத்தின் இந்தியர் நடவடிக்கை செயற்குழுவின் ஏற்பாட்டில் பொங்கலோ பொங்கல் நிகழ்ச்சி புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 5லுள்ள புளோக் 388-ன் வெற்றுத்தளத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்குக் கிட்டத்தட்ட 250 பேர் வருகை அளித்தனர்.

இதுபோன்ற கொண்டாட்டங்கள் மூலம் சிங்கப்பூரில் நல்லிணக்கம் அதிகரிக்கும் என நம்புவதாகவும் திருவாட்டி லோ கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி பிற்பகல் இரண்டு மணிக்கு நிறைவடைந்தது.
அனைவரும் ஒன்றுகூடி பொங்கல் வைத்தல், ஆடல் பாடல் அங்கம், உறி அடிக்கும் போட்டி, கரும்பு சாப்பிடும் போட்டி உள்ளிட்ட நடவடிக்கைகளில் வட்டாரவாசிகள் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

சிங்கப்பூரின் அமைதிக்காகவும் வளப்பத்திற்காகவும் பல இன, பல சமயத்தவரை ஒன்றுதிரட்டி கொண்டாட்ட உணர்வில் திளைக்கவைப்பது இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்றார் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் பிரமீளா கிலீட்டஸ்.
“முதன்முறையாக நாங்கள் நடத்திய இந்நிகழ்ச்சியின் உணவு சமைக்கும் அங்கத்தில் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த பெண்களை மட்டுமின்றி ஆண்களையும் ஈடுபடுத்தியுள்ளோம்.

“பொங்கலில் சேலைக்கு மட்டுமன்றி வேட்டிக்கும் தமிழர் பண்பாட்டில் முக்கியத்துவம் உள்ளது என்பதை இந்நிகழ்ச்சியில் எடுத்துக்காட்ட விரும்பினோம்.
“அத்துடன் உறி அடித்தல் அங்கத்திற்கு உற்சாகமான வரவேற்பு கிட்டியது,” என்று அவர் கூறினார்.

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை அணிந்தது ஒரு மகிழ்ச்சியான இனிய அனுபவம் எனக் கூறினார் நிகழ்ச்சியில் பங்குபெற்ற திரு சிம் சீ வெஸ்.
“நிகழ்ச்சியின் வண்ணம் தீட்டும் போட்டிக்காக என் உறவினர் மகனை உடன் அழைத்தேன். நாங்கள் இருவருமே, தமிழர் பண்பாட்டைப் பற்றி மேலும் கற்றோம்,” என்றார் 30 வயது திரு சிம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!