கொரோனா கிருமி பரவல் எதிரொலி: பயணத்துறை பெருமளவு பாதிக்கப்படலாம்

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா கிருமி பரவல் காரணமாக சிங்கப்பூரின் பயணத் துறை பெருமளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 25 விழுக்காடு முதல் 30% வரை சரியும் என்று சிங்கப்பூர் பயணத் துறை கழகம் கணித்துள்ளது.

2003ஆம் ஆண்டில் ‘சார்ஸ்’ நெருக்கடியின்போது ஏற்பட்ட 19 விழுக்காடு சரிவுடன் ஒப்பிடுகையில் தற்போது அதைவிட அதிகமாக பயணத்துறை பாதிப்படையலாம் என்று உத்தேச மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

“சார்ஸ் காலகட்டத்தில் இருந்ததைப்போன்றே பயணத் துறை பாதிக்கப்படலாம் அல்லது அதைவிட மோசமாக பாதிக்கலாம்,” என்று தனது ஆண்டு மதிப்பீட்டு அறிக்கையில் சிங்கப்பூர் பயணத் துறைக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கீத் டான் சொன்னார்.

“தற்போதைய சூழ்நிலையில் நாள் ஒன்றுக்கு சிங்கப்பூருக்கு வருகையளிக்கும் அனைத்துலக பயணிகளில் 18,000 முதல் 20,000 வரை குறையலாம்,” என்றார் அவர். அதற்கான காரணங்களையும் அவர் விளக்கினார்.

சீனாவில் எவ்வளவு காலத்திற்கு கொரோனா கிருமியின் பாதிப்பு நீடிக்கும், இதனால் வட்டாரத்தில் ஏற்படும் பொருளியல் பாதிப்பு, சிங்கப்பூரிலும் இவ்வட்டாரத்திலும் கிருமியின் பாதிப்பு நீடிக்கும் காலம் போன்ற அம்சங்களைப் பொறுத்து பயணத்துறை வளர்ச்சி அமையும் என்று அவர் மேலும் சொன்னார்.

இருந்தாலும் விருந்தோம்பல், சுற்றுலாத் தளங்கள், சில்லறை விற்பனைத் துறை, உணவு மற்றும் குளிர்பானத் துறை ஆகியவற்றை உள்ளடக்கிய பயணத்துறை 2020ஆம் ஆண்டில் மீண்டும் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி காணும் என்று திரு கீத் டான் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பயணிகளின் வருகையும் அவர்கள் சிங்கப்பூரில் செலவழித்த தொகையும் சாதனை அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் இவ்வாண்டு பயணத் துறை சரிவைச் சந்திக்கவிருக்கிறது.

2019ல் பயணிகளின் எண்ணிக்கை 3.3% கூடி 19.1 மில்லியனைத் தொட்டது.

இங்கு அவர்கள் செலவழித்த தொகையும் 0.5% அதிகரித்தது. இதன் மதிப்பு 27.1 பில்லியன் வெள்ளி. இதற்கு சீனாவிலிருந்து வரும் பயணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அதாவது சிங்கப்பூருக்கு உலக நாடுகளிலிருந்து வரும் ஐந்து பயணிகளில் ஒருவர் சீனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!