குடும்ப வருவாய் கூடியது

சிங்கப்பூரின் குடும்ப வருவாய் சமமின்மை கடந்த ஆண்டு கிட்டத்தட்ட இருபதாண்டுகள் காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்ததாகவும் குடும்பங்களின் இடைநிலை வருவாய் 5.6 விழுக்காடு வரை வளர்ச்சி கண்டு $9,425க்கு உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

‘ஜினி கோஎஃபிஷியண்ட்’ அளவீட்டின்படி கடந்த ஆண்டு சிங்கப்பூரின் வருவாய் சமமின்மை நிலவரம் 0.452க்குக் குறைந்தது. 2018ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் குறைவு என்பதோடு கடந்த 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆகக் குறைந்த நிலை இது என புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ள வருடாந்திர குடும்ப வருமான நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

வேலைநலன் மற்றும் ஜிஎஸ்டி உதவித்திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு அரசாங்கம் மேற்கொண்ட பரிமாற்றங்களைச் சரிக்கட்டிய பின்னர் ‘ஜினி கோஎஃபிஷியண்ட்’ அளவீடு மேலும் 0.398க்குக் குறைத்தன. சமூகச் சமமின்மையை சமாளிப்பதற்கு அரசாங்கத் தலைவர்கள் முன்னுரிமை கொடுக்க உறுதி எடுத்துக்கொண்டதைத் தொடர்ந்து இந்த நிலவரம் ஏற்பட்டு உள்ளது.

அவர்களின் அச்செயல் காரணமாக குறைந்த வருமான ஊழியர் களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. அத்துடன் ஏராளமான ஊழியர்களுக்கு தொடக்க சம்பளத்தை உயர்த்த தேசிய சம்பள மன்றம் பரிந்துரைத்தது.

வருவாய் நிலவரத்தை 0 முதல் 1 வரை ‘ஜினி கோஎஃபிஷியண்ட்’ அளவிடுகிறது. 0 என்பது முழுமை யான வருவாய் சமநிலையையும் 1 என்பது முழுமையான வருவாய் சமமின்மையையும் குறிக்கின்றன. சிங்கப்பூரின் ‘ஜினி கோ எஃபிஷியண்ட்’ அளவீடு 2000ஆம் ஆண்டில் 0.442 ஆகவும் 2001ஆம் ஆண்டில் 0.454 ஆகவும் இருந்தது. 2007ஆம் ஆண்டு 0.482ஐ எட்டியதுதான் ஆக உச்சம்.

அதன் பின்னர் படிப்படியாகக் குறைந்து வந்தாலும் 2012ஆம் ஆண்டு அந்த அளவு மீண்டும் உயர்ந்தது. அண்மைய ஆண்டுகளில் 0.46 என்னும் நிலையைச் சுற்றியே நிலைமை இருந்தது.

சிங்கப்பூர் குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவரும் வேலை மூலம் ஈட்டும் தொகை உயர்ந்ததை நேற்றைய புள்ளிவிவர அறிக்கை தெரிவித்தது. அதேபோல, வேலை செய்யாதவரையும் உள்ளடக்கிய உள்ளூர் குடும்பங்கள் பல்வேறு உதவித் திட்டங்கள் வாயிலாக கடந்த ஆண்டு சராசரியாக ஒருவருக்கு $4,682 என்னும் விகிதத்தில் உதவித்தொகை பெற்றதாக அறிக்கை சுட்டியது.

“வீவகவின் ஓரறை, ஈரறை வீடுகளில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் சராசரியாக $10,548 பெற்றனர். இது மற்ற வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் பெற்றதைக் காட்டிலும் இருமடங்கிற்கு மேல் அதிகம்,” என சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

குடிமக்கள் அல்லது நிரந்தரவாசி வசிக்கும், குறைந்தபட்சம் ஒரு குடும்ப உறுப்பினர் வேலை செய்யும் குடும்பங்களின் இடைநிலை வருவாய் கடந்த ஆண்டு 1 விழுக்காடு அதிகரித்து $9,425 ஆக இருந்தது. 2018ஆம் ஆண்டில் அந்த வருமானம் $9,293 ஆக இருந்தது. குறைந்தபட்சம் ஓர் உறுப்பினர் வேலை செய்வோரைக் கொண்ட குடும்பங்கள் கடந்த ஆண்டு 86.8 விழுக்காடாக இருந்தது.

“வேலை மூலம் வருமானம் ஈட்டுவோரை உள்ளடக்கிய குடும்பங்களின் இடைநிலை மாத வருவாய் 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை 13 விழுக்காடு அதிகரித்தது. இது ஆண்டுக்கு 2.5 விழுக்காடு என்னும் விகிதத்தில் உயர்ந்ததாகக் கணக்கிடலாம்,” என்றது அறிக்கை.

இதே காலகட்டத்தில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் இடைநிலை மாத வருவாயும் ஒட்டுமொத்தமாக 22.2 விழுக்காடு உயர்ந்தது. ஆண்டுக்கு 4.1 விழுக்காடு என்னும் அடிப்படையிலான வளர்ச்சி இது.

வருவாய் சமமின்மையை அளவிட ஓஇசிடி எனப்படும் பொருளியல் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் திருத்தப்பட்ட முறையைப் பயன்படுத்துகிறது. பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் இதே முறையைப் பயன்படுத்துகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!