சாங்கி விமான நிலையத்திலுள்ள கடைகளுக்கு 50% வாடகைக் கழிவு

சாங்கி விமான நிலையத்தில் உள்ள சில்லறை விற்பனை, உணவுக் கடைகள், சேவை நிலையங்கள் இம்மாதம் 1ஆம் தேதியில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு தங்களுக்கான வாடகையில் பாதியைச் செலுத்தினால் போதும். வரவு செலவுத் திட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்ட உதவித் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தகச் செலவுகளை ஈடுகட்டவும் வேலைகளைப் பாதுகாக்கவும் விமான நிலையத்தின் வான்வெளித் தொடர்பைக் கட்டிக்காக்கவும் உதவும் வகையில் விமானத் துறைக்கு $112 பில்லியன் உதவித்திட்டத்தைத் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட் அறிவித்து இருந்தார்.