இணைய மோசடிகளை எதிர்கொள்ள பல அமைச்சுகளைக் கொண்ட புதிய குழு

சென்ற ஆண்டு இணைய மோசடிகள் குறித்து போலிஸ் புகார்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அதனை எதிர்கொள்ள பல அமைச்சுகளைக் கொண்ட புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


இணைய மோசடியாளர்களின் நடவடிக்கைகளை முறியடிக்கவும் இழப்புகள் ஏற்படாமல் இருக்கவும் பொதுமக்கள் மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்கவும் புதிய குழு உத்திபூர்வ வழிகளை ஆராய்ந்து நடைமுறைபடுத்தும்.


உள்துறை அமைச்சு, தொடர்பு, தகவல் அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுடன் இதர அமைச்சுகளைச் சேர்ந்தவர்களுடன் இந்த குழு அமைக்கப்படும்.


மோசடியாளர்கள் பல புதிய, நூதன வழிகளைக் கொண்டு பொதுமக்களை ஏமாற்ற முற்படுகிறார்கள் என்றும் கவலைக்குரிய அம்சமாக இணையம் தொடர்பான மோசடிகள் இருந்துவருவதாகவும் இன்று (திங்கட்கிழமை) தமது அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்ற செயலாளர் சுன் சுவெலிங் தெரிவித்தார்.


மோசடிகள் குறித்து சென்ற ஆண்டு போலிசில் அளிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்துள்ளது. மின் வர்த்தகம், போலி கடன், உடலுறவுக்கு முன்பணம் போன்ற திட்டங்கள் குறித்து அந்த மோசடிகள் நடத்தப்பட்டுள்ளன.


தொழில்நுட்ப மாற்றங்களின் வேகத்துக்கு சட்ட அமலாக்கத் திறன்களும் ஈடுகொடுக்க வேண்டும் என்றார் திருவாட்டி சுன்.
அமைச்சுகள் பலவற்றைக் கொண்ட குழு மட்டுமல்லாமல் போலிஸ் படையின் மோசடி எதிர்கொள்ளும் மையத்தைச் சென்ற ஆண்டு அமைத்து அரசாங்கம் தமது ஆற்றலை அதிகரித்துள்ளது.


‘‘ அரசாங்கம் மோசடிகளுக்கு எதிரான தனது முயற்சிகளை முடுக்கிவிட்ட போதிலும் இதனை நம்மால் தனியாக எதிர்கொள்ள முடியாது. வர்த்தகங்களுக்கும் இதில் ஒரு முக்கிய பங்கு உண்டு,’’ என்றார் திருவாட்டி சுன். மின் வர்த்தகத் தலங்களும் வங்கிகளும் கூட இணைய மோசடிக்காரர்களால் குறி வைக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதை அவர் சுட்டினார்.


இத்தகைய வர்த்தகங்களுடன் அரசு ஒன்றாக இணைந்து செயல்பட்டு மோசடிக்காரர்களைத் தடுக்கும் செயல்முறைகளை அரசு செயல்படுத்தும்.
எஸ்ஜிசெக்யூர் இயக்கம் மூலம் பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்கவும், அவற்றை எதிர்கொள்ளவும் உள்துறை அமைச்சுக் குழு பலதரத் திட்டங்கள் மூலம் தொடர்ந்து சமூகத்தை ஈடுபடுத்தும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!