மலேசியாவின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள்

கொவிட்-19 கிரு­மித் தொற்று மலே­சி­யா­வில் வேக­மாக பர­வி­வ­ரு­வ­தால் அந்­நாட்டு அர­சாங்­கம் நேற்று முன்­தி­னம் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணையை அறி­வித்­தது.

அதனை அடுத்து தின­மும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கில் மலே­சி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூர் வந்து வேலை செய்­யும் ஊழி­யர்­களும் அவர்­க­ளது முத­லா­ளி­களும் மாற்று ஏற்­பா­டு­க­ளுக்கு விரைந்து செயல்­ப­டு­கின்­ற­னர்.

தமது ஐந்து மலே­சிய ஊழி­யர்­களும் தின­மும் அவர்­கள் வசிக்­கும் மலே­சி­யா­வின் ஜோகூர் பாரு­விற்­குச் சென்­று­வ­ரு­வ­தா­கக் கூறி­னார் லிட்­டில் இந்­தி­யா­வில் உண­வ­கம் நடத்­தும் திரு ஜெய­கு­மார்.

“அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்கு அவர்­க­ளால் செல்ல முடி­யாது. அவர்­கள் கடை­யின் மேற்­ப­கு­தி­யி­லேயே தங்­கு­வ­தற்­கான ஏற்­பாட்­டைச் செய்­கி­றேன்,” என்­றார் அவர்.

“இருப்­பி­னும் அவர்­கள் தங்­க­ளின் குடும்­பத்­தி­னரை இரு வாரங்­க­ளுக்­குப் பார்க்க இய­லாது என்ற மனக்­கு­றையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­னர்,” என்­பதை அவர் தெரி­வித்­தார்.

வயது முதிர்ந்த பெற்­றோர்­கள் தம்­மு­டன் வசிப்­ப­தால்­தான் தாம் தின­மும் ஜோகூர் சென்று வரு­வ­தா­கக் கூறி­னார் கடந்த 20 ஆண்­டு­க­ளா­கச் சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் திரு வேல்­மு­ரு­கன்.

“என் இரண்டு குழந்­தை­களும் மனை­வி­யும் தின­மும் நான் இரவு வீடு திரும்­பி­ய­தும்­தான் சேர்ந்து சாப்­பி­ட­வேண்­டும் என்று காத்­தி­ருப்­பார்­கள். எங்­கள் குடும்­பத்­தில் பல ஆண்­டு­க­ளாக அது வழக்­க­மாக உள்­ளது.

“இந்த இரண்டு வாரங்­கள் என்­னால் வீட்­டுக்­குப் போக­மு­டி­யாது. சற்று சிர­ம­மா­கத் தான் இருக்­கும்,” என்­றார் திரு ரவி கதி­ரே­சன். இருப்­பி­னும் வரு­மா­னம் தேவை­யென்­ப­தால் சங்­க­டங்­க­ளைச் சமா­ளித்து வாழ்க்­கையை நடத்த வேண்­டும் என்­ற­னர் சிலர்.

“வியா­பா­ரம் மோச­மாக இருப்­ப­தால் என் ஊழி­யர்­க­ளின் விருப்­பத்­தைக் கேட்­டேன். இரு வாரங்­க­ளுக்கு மலே­சி­யா­விற்­குத் திரும்ப விரும்­பு­வோ­ருக்கு ஊதி­ய­மில்லா விடுப்பு வழங்­கு­கி­றேன் என்று கூறி­னேன்.

“ஆனால், அவர்­க­ளுக்கு வரு­மா­ன­மில்­லா­மல் தின­சரி செல­வு­களை எப்­படி சமா­ளிப்­பது என்ற கவ­லை­யும் உண்டு,” என்­றார் காய்­கறி, மளி­கைப் பொருட்­களை விற்­கும் திரு­வாட்டி சாந்தி கிரு­‌ஷ்­ணன்.

அதிக எண்­ணிக்­கை­யில் மலே­சிய ஊழி­யர்­கள் தேக்கா சந்­தை­யின் மேல் தளத்­தில் உள்ள கடை­களில் பணி­பு­ரி­கின்­ற­னர். அவர்­கள் யாவ­ரும் இந்த வாரம் மலே­சி­யா­வில் இருக்­கின்­ற­னர்.

தேக்கா சந்தை ஐந்து நாட்­களுக்கு சுத்­தம் செய்­வ­தற்­கும் பழுது பார்ப்­ப­தற்­கும் மூடப்­பட்­டுள்­ளது. அதைத் தொடர்ந்து கடை­கள் மூடப்­பட்­டி­ருப்­ப­தால் மலே­சிய ஊழி­யர்­கள் விடுப்­பில் தாய்­நாட்­டிற்­குச் சென்­றுள்­ள­னர்.

“எனது கடை­யில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­கள் மலே­சியா திரும்­பி­விட்­ட­னர். நேற்­றுக் காலை தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொண்டு உடனே திரும்­பச் சொன்­னேன். ஜோகூ­ரில் வசிக்­கும் ஒரு­வர் வரு­வ­தா­கக் கூறி­னார்.

“மற்­றொரு ஊழி­யர் வழக்­க­மாக சிங்­கப்­பூ­ரில் வசிப்­ப­வர். ஆனால் நீண்ட விடுப்பு கிடைத்­த­தால் தனது பூர்­வீ­க­மான பினாங்­குக்­குச் சென்­று­விட்­டார். அவ­ரது வருகை தான் சந்­தே­கம்,” என்­றார் பல ஆண்­டு­க­ளாக தேக்கா சந்­தை­யில் துணிக்­கடை நடத்­தி­வ­ரும் திரு மல்­விந்­தர் சிங்.

மலே­சி­யா­வில் வசித்து சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் சிங்­கப்­பூ­ரர்­களுக்­கும் இந்த அண்­மைய கட்­டுப்­பாட்டு ஆணை சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­தி­உள்­ளது.

ஜோகூர் பாரு பிளந்­தோங் பகுதி­யில் தம் குடும்­பத்­தோடு வசித்­து­வரும் சிங்­கப்­பூ­ர­ரான 36 வயது வீ. பிரேம்­கு­மார் புதிய கட்­டுப்­பாட்டு ஆணை­யால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்.

பாது­கா­வல் அதி­கா­ரி­யாக இங்கு ஒரு கட்­டு­மான நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றும் பிரேம்­கு­மார் தின­மும் வேலைக்­காக சிங்கப்பூர்-ஜோகூர் கடற்­பா­லத்தை கடந்து சிங்­கப்­பூர் வரு­வது வழக்­கம்.

புதிய கட்­டுப்­பா­டு­க­ளால், இவர் சிங்­கப்­பூ­ரி­ல் உள்ள தம் நிறு­வன வளா­கத்­தில் ஒதுக்­கப்­பட்­டுள்ள தங்­கும் இடத்தில் இரு வாரங்­களுக்கு தங்க உள்­ளார்.

இத­னால் அவ­ரால் தம் மனைவி­யை­யும் ஒரு வயது பெண் குழந்தை­யை­யும் இரு வாரங்­க­ளுக்கு பார்க்க இய­லாது.

“இரு வாரங்­க­ளுக்கு தேவை­யான பொருட்­களை எடுத்­துக்­கொண்டு நேற்று வீட்­டி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு புறப்­பட்­டேன்.

“கட்­டுப்­பாட்­டுக் காலத்­திற்கு பிறகு என்ன நடக்­க­வி­ருக்­கிறது என்­பதை பொறுத்­தி­ருந்­து­தான் பார்க்க வேண்­டும், ” என்­றார் திரு பிரேம்­கு­மார்.

விரை­வில் கிரு­மித்­தொற்று நிலைமை கட்­டுக்­குள் வந்து வழக்­க­மான வாழ்க்கை மீண்­டும் திரும்­ப­வேண்­டும் என்று பல­ரும் பிரார்த்­திப்­ப­தா­கக் கூறி­னர்.

கூடு­தல் செய்தி: ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!