வாரம் ஒரு நாள் வீட்டிலிருந்து பாட வகுப்பு: ஏப்ரலில் அறிமுகம்

பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றும் நோக்கில் மாண­வர்­கள் வரும் புதன்­கி­ழமை (ஏப்­ரல் 1) முதல் வாரம் ஒரு நாள் வீட்­டி­லி­ருந்­த­வாறே வகுப்புகளில் பங்கேற்க இருக்­கி­றார்­கள்.

தொடக்­கப் பள்ளி, உயர்­நி­லைப் பள்ளி, தொடக்­கக் கல்­லூரி, மையப்­ப­டுத்­தப்­பட்ட கல்வி நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றில் பயி­லும் மாண­வர்­க­ளுக்கு இந்­தப் புதிய நடை­முறை பொருந்­தும் என்று கல்வி அமைச்சு நேற்று மாலை தெரி­வித்­தது.

வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­வோர் மூலம் கொவிட்-19 கிரு­மித்­தொற்று பர­வும் சம்­ப­வம் சிங்­கப்­பூ­ரில் அதி­க­ரித்து வரு­வ­தா­லும் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை தீவி­ரப்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யம் இருப்­ப­தா­லும் மாண­வர்­க­ளி­டம் இந்­தப் புதிய கற்­றல் முறை அறி­மு­க­மா­கிறது.

அதன்­படி, தொடக்­கப் பள்ளி மாண­வர்­கள் ஒவ்­வொரு வார­மும் புதன்­கி­ழ­மை­யன்று இல்­லம் சார்ந்த கற்­ற­லில் ஈடு­ப­டு­வார்­கள். அதே­போன்று உயர்­நிலை மாண­வர்­கள் வியா­ழக்­கி­ழ­மை­யன்­றும் தொடக்­கக் கல்­லூரி மற்­றும் மையப்­ப­டுத்­தப்­பட்ட கல்வி நிலை­யங்­க­ளின் மாண­வர்­கள் வெள்­ளிக்­கி­ழ­மை­யன்­றும் இந்­தப் புதிய முறை­யில் பாடங்­க­ளைக் கற்­பர்.

வீட்­டி­லி­ருந்து நான்கு முதல் ஐந்து மணி நேரம் மாண­வர்­கள் பாடம் பயில்­வர். அதில் இரண்டு மணி நேரம் மின்­னி­லக்கக் கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்டிவரும்.

வீட்­டி­லி­ருந்­த­வாறே வகுப்­பு­களில் பங்­கேற்­ப­தற்­கான கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது பற்றி வரும் திங்­கட்­கி­ழமை (மார்ச் 30) மாண­வர்­க­ளுக்­கும் பெற்­றோர்­க­ளுக்­கும் பள்­ளி­கள் விளக்­கும். கற்­றல் தேவைப்­ப­டும்­போது மின்­னி­லக்­கக் கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்­தாத மாண­வர்­க­ளுக்­குத் தேவைப்­படும் உத­வி­களை பள்­ளி­கள் வழங்­கும்.

“வெளி­நாட்­டி­லி­ருந்து கிரு­மித்­தொற்­று சம்­ப­வங்­கள் அண்­மை­யில் அதி­க­ரித்­த­தைத் தொடர்ந்து கொவிட்-19 கிரு­மியை எதிர்த்­துப் போராட வேண்­டிய புதிய கட்­டத்­தில் சிங்­கப்­பூர் உள்­ளது.

“எனவே பாது­காப்­பான இடை­வெளி என்­னும் நடை­மு­றையை ஆத­ரிக்­கும் வண்­ணம் பள்­ளி­கள் படிப்­ப­டி­யாக பல­த­ரப்­பட்ட கற்­றல் முறை­க­ளுக்கு மாற­வேண்டி உள்­ளன. அதன் தொடக்­க­மாக வாரம் ஒரு நாள் இல்­லம் சார்ந்த கற்­றல் அறி­மு­கம் செய்­யப்­ப­டு­கிறது,” என்று அமைச்சு கூறி­யது.

இந்த ஏற்­பாட்­டின் மூலம் கல்வி அமைச்­சின் பாலர் பள்­ளி­கள் பாதிக்­கப்­ப­ட­மாட்டா.

தேவைப்­ப­டும்­போது மேலும் அதிக நாட்­கள் வீட்­டி­லி­ருந்து கற்­கும் நடை­மு­றைக்கு தயா­ரா­கிக்­கொள்ள மாண­வர்­க­ளுக்­கும் பெற்­றோர்­க­ளுக்­கும் இந்­தப் புதிய நட­வ­டிக்கை உத­வும் என்று கல்வி அமைச்­சர் ஓங் யி காங் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

“வீட்­டி­லி­ருந்து வகுப்­பு­களில் கலந்­து­கொள்­ளும் அந்த ஒரு நாள் தவிர வாரத்­தில் எஞ்­சிய நாட்­களில் மாண­வர்­கள் பள்­ளிக்­குச் செல்­லும்­போது கூட்­டத்­தைக் குறைக்­கும் வண்­ணம் பள்­ளி­கள் மாறு­பட்ட நேரங்­களை வகுக்­கும். பொதுப் போக்­கு­வ­ரத்து மூலம் பள்­ளிக்­குச் சென்று வீடு திரும்­பும் மாண­வர்­கள் இத­னால் பயன் பெறு­வர்.

“கிருமி பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­களை சிங்­கப்­பூர் கடந்த வாரங்­களில் படிப்­ப­டி­யா­கத் தீவி­ரப்­ப­டுத்தி வரு­கிறது. மக்­கள் வாழ்க்­கை­யில் பெரும் பகு­தியை வகிக்­கும் பள்­ளி­களில் நட­வ­டிக்­கை­களை மேம்­ப­டுத்த வேண்டி உள்­ளது.

“எனவே பள்­ளி­களை மூடும்­ப­டி­யான நிலை­மையை ஏற்­ப­டுத்­தும் வியப்­பான எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யி­லும் ஈடு­ப­டு­வதை நாங்­கள் விரும்­ப­வில்லை.

“பள்­ளி­களை திடீ­ரென்று கட்­டா­ய­மாக மூட வேண்­டிய அவ­சி­யம் பல நாடு­க­ளுக்கு ஏற்­பட்டு உள்­ளது. ஆனால் சிங்­கப்­பூ­ருக்கு அதைத் தவிர்த்து மற்ற தெரி­வு­கள் உள்­ளன,” என்­றார் அமைச்­சர். இந்த கற்றல் ஏற்பாடு எதுவரை நடப்பில் இருக்கும் என்று கேட்ட தற்குப் பதிலளித்த அமைச்சர் ஓங், “எவ்வளவு நாட்களுக்கு கிருமியின் தாக்கம் இருக்கும் என்பதைப் பொறுத்தது அது,” என்றார்.

பள்ளிகள் ஏன் மூடப்படவில்லை: பிரதமர் லீ விளக்கம்:

பள்ளிகள் மூடப்பட்டு பெற்றோர் தங்களது பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள வீட்டில் இல்லாமற்போனால் அந்தப் பிள்ளைகள் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகும் ஆபத்து அதிகம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

“பள்ளிகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் உள்ளவை. அவை மூடப்பட்டால் எல்லா பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை வீட்டிலிருந்து கவனித்துக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது.

"பள்ளிகளைத் திறக்காவிட்டால் உங்களது பிரச்சினை தீர்ந்துவிட்டதாக அர்த்தமாகாது. காரணம் அந்தப் பிள்ளைகள் எங்கே போவார்கள்? அப்படிப்பட்ட சூழலில் அருகில் உள்ள கடைகளுக்குச் செல்வார்கள் அல்லது சுற்றித் திரிவார்கள்.

"அது கொவிட்-19 கிருமி தொற்றுவதற்கான வாய்ப்பாக அமைந்துவிடும்,” என்றார் பிரதமர்.

#சிங்கப்பூர் #பள்ளி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!