ஈசூனில் குளிர்நீர் சாதனத்தில் முகக்கவசத்தை வீசிய சம்பவம்

நீ சூன் ஈஸ்ட் கோர்ட்யார்டில் உள்ள குளிர்நீர் சாதனத்தில் (water cooler) முகக்கவசம் ஒன்று வீசப்பட்டிருந்ததன் தொடர்பில் நகர மன்றம் பதிலளித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 2) இரவு 8 மணியளவில் அந்த குளிர்நீர் சாதனத்தில் முகக்கவசம் வீசப்பட்டிருப்பதைக் கண்டதாகக் குறிப்பிட்ட ஸ்டோம்ப் வாசகர் ஃபிரான்சிஸ்கோ, “குடியிருப்பாளர்களுக்காக அழகிய முற்றத்தை அரசாங்கம் கட்டிக்கொடுத்து, குளிர்நீர் சாதனங்களையும் அமைத்துக் கொடுத்துள்ளது.

“கொவிட்-19 சூழல் காரணமாக அந்த குளிர்நீர் சாதனங்களின் குழாய்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால், முகக்கவசத்தை அதில் எறிவது மன்னிக்க முடியாதது,” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன் தொடர்பில் நகர மன்றத்திடம் ‘ஸ்டோம்ப்’ எழுப்பிய கேள்விக்கு, “வழக்கமான துப்புரவு பணிகளின்போது எங்களது துப்புரவு ஊழியர்கள் அந்த முகக்கவசத்தை அப்புறப்படுத்திவிட்டனர்.

“இத்தகைய சம்பவத்தை நகர மன்றம் முதல் முறையாக எதிர்கொள்கிறது. இது மீண்டும் நிகழாது என நம்புகிறோம். இதன் தொடர்பில் குடியிருப்பாளர்கள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

“எங்களது துப்புரவு ஊழியர்கள் இந்த இடத்தில் கூடுதல் கவனம் செல்த்துவர். நகர மன்றம் சூழலை தொடர்ந்து கண்காணிக்கும்,” என்று தெரிவித்தது.

சிங்கப்பூரில் கொவிட்-19 சூழலைக் கருத்தில்கொண்டு பொதுமக்கள் அனைத்து நேரங்களிலும் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளும்படி ஊக்குவிப்பதாகவும் நகர மன்றம் தெரிவித்தது.

#சிங்கப்பூர் #ஈசூன் #கொவிட்-19

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!