வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்காக மிதக்கும் விடுதிகள்

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும்விடுதிகளில் தொடர்ந்து கொரோனா கிருமித்தொற்று குழுமங்கள் பதிவாகி வருவது கவலை அளிக்கும் போக்காக உள்ள நிலையில், சுகாதார பாதிப்பில்லாத வெளிநாட்டு ஊழியர்கள் இவ்வாரம் முதல் தஞ்சோங் பகார் முனையத்தின் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி ஒன்றில் உருவாக்கப்பட்ட இரு மிதக்கும் விடுதிகளில் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு விடுதியும் நூற்றுக்கணக்கான ஆட்களைக் கொள்ளும் என்றும் பாதுகாப்பான இடைவெளி இருப்பதை உறுதிசெய்யும் என்றும் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் குறிப்பிட்டார். கிருமித்தொற்று குழுமங்கள் உருவாகியுள்ள தங்கும்விடுதிகளில் கூட்டத்தைக் குறைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சொன்னார். நேற்று மிதக்கும் விடுதி ஒன்றைப் பார்வையிட்டார் அமைச்சர் கோ.

வேறு இடங்களில் தயாராகும் உணவு, மிதக்கும் விடுதிகளில் உள்ள அறைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டால் கலந்துறவாடலைக் குறைக்கலாம் என்று திரு கோ தம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

உள்கட்டமைப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் உள்ள திரு கோ, “சீனாவில் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே கிருமித்தொற்று ஏற்பட்டது ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. அதேபோல் இங்கு ஒவ்வொரு தங்கும்விடுதியும் மிகப் பெரிய ஒரு குடும்பம் போன்றது. இது அக்கறை செலுத்த வேண்டிய ஒன்றாக எங்களுக்கு அமைந்தது,” என்றார்.

புதிய தங்கும்விடுதிகளைக் கட்ட நேரம் எடுப்பதால் இத்தகைய மிதக்கும் தங்கும்விடுதிகளைப் பயன்படுத்துவது ஒரு தீர்வாக இருந்ததென திரு கோ சுட்டினார்.

கொவிட்-19 சோதனை உட்பட சுகாதாரப் பரிசோதனைக்குப் பின்னரே வெளிநாட்டு ஊழியர்கள் இந்த மிதக்கும் விடுதிகளுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!