வெளிநாட்டு ஊழியர்கள் தங்க விரிவான திட்டங்கள்

கொரோனா கிரு­மித்­தொற்றை முறி­ய­டிக்க அர­சாங்­கம் தங்­கும் விடு­தி­களில் அதிக கவ­னம் செலுத்தி வரும் வேளை­யில், கடை­வீ­டு­கள், வீவக வீடு­கள், தனி­யார் குடி­யி­ருப்பு பேட்­டை­கள் போன்ற இடங்­களில் தங்­கும் இதர வெளிநாட்டு ஊழி­யர்­க­ளை­யும் அர­சாங்­கம் பாது­காக்­கும் என்று உறு­தி­ய­ளித்­துள்­ளார் அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வுக்­குத் தலைமை தாங்கும் அமைச்­சர்­க­ளுள் ஒருவரான திரு லாரன்ஸ் வோங்.

அதே­நே­ரத்­தில், குண­ம­டைந்த வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைத் தங்க வைப்­ப­தற்கு விரிவான திட்­டங்­கள் உள்­ளது என்­றும் புதிய இடங்­கள் கட்­டப்­பட்டு, ஒதுக்­கப்­படும் என்­றும் கூறினார் திரு லாரன்ஸ்.

“சில இடங்­கள் குறைந்த காலத்­திற்­கும், சற்றுக் கூடிய காலத்­திற்­கும் தங்­கும் ஏற்­பா­டு­க­ளாக அமை­யும்.

“அத்­து­டன் நீண்­ட­கால தங்­கும் வச­தி­க­ளை­யும் தொடங்­க­வுள்­ளோம். அடுத்த ஓரிரண்டு ஆண்­டு­களில் அவை தயா­ரா­கும்,” என்று தெரி­வித்­தார் அமைச்சர் லாரன்ஸ் வோங்.

“தங்­கும் விடு­தி­க­ளுக்கு வெளியே தனி­யார் குடி­யி­ருப்புப் பேட்­டை­கள், கடை­வீ­டு­களில் தங்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­களில் அதி­க­மா­னோர் கட்­டு­மா­னத் துறை­யில் பணி­பு­ரி­கின்­ற­னர்.

“அவர்­க­ளுக்கு வீட்­டி­லேயே தங்கி­யி­ருக்­கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட ஊழி­யர்­கள் வீட்டை விட்டு வெளியே செல்­லக்­கூ­டாது.

“முத­லா­ளி­கள் அவர்­க­ளின் அன்­றா­டத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­ய­வேண்­டும். உணவு ஆகி­ய­ன­வற்றை வழங்­க­ வேண்­டும்,” என்றார் அவர்.

நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது தமிழ் முரசு முன் வைத்த கேள்­விக்­குப் பதி­ல­ளித்த தேசிய வளர்ச்சி அமைச்­சர் திரு லாரன்ஸ் இவ்­வாறு கூறி­னார்.

கட்­டு­மா­னத்­து­றை என்பதால் மனி­த­வள அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, கட்­டட, கட்­டு­மான ஆணை­யம் ஆகிய அமைப்பு­க­ளுக்­கி­டையே ஒருங்­கி­ணைந்த திட்டம் உள்­ளது என்­றும் சிங்­கப்பூர் குத்­த­கை­யா­ளர்­கள் சங்­கம் போன்ற நிறு­வன சங்­கங்­க­ளு­டன் அர­சாங்­கம் இணைந்து செயல்­ப­டு­கிறது என்­றும் தெரி­வித்­தார் அவர்.

“முத­லா­ளி­கள் அவர்­க­ளின் கடமை­யைச் செய்­கி­றார்­கள் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­கி­றோம்.

“அத்துடன், தள சோத­னை­க­ளை­யும் மேற்­கொண்டு ஊழி­யர்­க­ளைக் கண்­கா­ணிக்­கி­றோம். அவர்கள் முத­லா­ளி­க­ளால் பராமரிக்கப்படு­கி­றார்­கள் என்­பதை உறுதி செய்­கி­றோம்,” என்று நம்­பிக்­கை­ய­ளித்­தார் திரு லாரன்ஸ்.

தங்­கும் விடு­தி­களில் தங்­கா­ம­லும் வீட்­டி­லேயே தங்­கி­யி­ருக்­கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டா­ம­லும் இருக்­கும் ஊழி­யர்­க­ளுக்கு தற்போது நடப்­பில் இருக்­கும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளைப் பின்­பற்ற வேண்­டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!