துணைப் பிரதமர்: முத்தரப்புப்  பங்காளித்துவம் கைகொடுக்கும்

கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீண்டுவர முத்தரப்புப் பங்காளித்துவம் கைகொடுக்கும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தமது மே தினத்தையொட்டி தெரிவித்துள்ளார்.

1960கள் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு மிகுந்த சவால்மிக்க காலகட்டமாக இருந்ததை அவர் நினைவுகூர்ந்தார். அப்போது முத்தரப்புப் பங்காளித்துவம் உருவாக்கப்பட்டது. அதன்படி ஊழியர்களும் தொழிற்சங்கங்கத்தினரும் இணைந்து அரசாங்கத்துக்கும் முதலாளிகளுக்கும் எதிராகச் செயல்படுவதற்குப் பதிலாக அரசாங்கத்துடனும் முதலாளிகளுடனும் இணைந்து செயல்பட்டதை திரு ஹெங் சுட்டினார்.

தற்போதைய கொரோனா கிருமித்தொற்று பிரச்சினையால் உலகளாவிய பொருளியல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக திரு ஹெங் தெரிவித்தார். இதைச் சமாளிக்க ஊழியர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் குடும்பங்களுக்கும் உதவும் வகையில் அரசாங்கம் $60 மில்லியன் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

மாற்றங்கள் ஏற்படும்போது சிங்கப்பூரர்கள் அனைவரும் மீள்திறனுடன் இருக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.

கொரோனா கிருமித்தொற்றுக்குப் பிறகு உலகத்தில் மாற்றம் ஏற்படக்கூடும். ஆனால் சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் சிங்கப்பூர் இன்னும் வலிமைமிக்க நாடாக திகழும் என்றார் திரு ஹெங்.

ஒவ்வொரு மே தினத்தன்று ஊழியர்களின் முனைப்பும் ஒருமைப்பாடும் கொண்டாடப்படுவதாக அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!