மனிதவள அமைச்சு: பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது

கொவிட்-19 நோய்ப் பரவலை முறியடிக்கும் திட்டம் நடப்பில் உள்ள இந்தக் காலகட்டத்தில், தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு நேற்று (மே 1) தெரிவித்தது.

8,500 முதலாளிகளில் சுமார் 300 பேர் (3 விழுக்காட்டினர்), ஊழியர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதை அமைச்சு சுட்டியது.

“ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட முதலாளிகளை அமைச்சு தொடர்புகொண்டுள்ளது,” என்று கூறிய அமைச்சு, ஏழு முதலாளிகள் நிதி நெருக்கடியில் உள்ளதாகக் கூறப்படுவதாகவும் அவர்களால் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாமல் போகலாம் என்றும் குறிப்பிட்டது.

வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் உதவி நிதி ஒன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் என அமைச்சு சொன்னது.

வேலை அனுமதிச் சீட்டு அல்லது எஸ்-பாஸ் அட்டை வைத்திருப்பவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள 66,000 முதலாளிகள் இங்கு உள்ளனர். கொவிட்-19 நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் கடுமையாக்கப்பட்டுள்ள வேளையில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இங்குள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், விடுதிகளைவிட்டு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!