விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கென கட்டப்பட்ட விடுதிகளில் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்ததிலிருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான உணவுப் பொட்டலங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவின் தரம், அளவு ஆகியவை தொடர்பிலான அக்கறைகளை உணவு தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் கவனத்தில் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.

"இது அவ்வளவு எளிதான செயல் அல்ல," என்று மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகமது கடந்த புதன்கிழமை தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

34 நிபுணத்துவம் வாய்ந்த உனவு தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் சுமார் 200,000 ஊழியர்களுக்கு உணவு தயாரித்து வழங்குகின்றனர்.

அத்தகைய விடுதிகளில் வசிப்போருக்கு வழங்கப்படும் உணவுக்கான செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் உணவுப் பொட்டலத்துக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை.

உணவு தயாரித்து வழங்கக்கூடிய நிறுவனங்களில் ஒன்றான நியோ குழுமம், சமைக்கப் பயன்படுத்தப்படும் பொருள்கள், அந்தப் பணியில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவற்றை மட்டுமே கட்டணமாக வசூலிப்பதாகத் தெரிவித்தது.

விடுதிகளுக்கு உணவு வந்து சேர்ந்த 30 நிமிடங்களுக்குள் உணவு ஊழியர்களுக்குக் விநியோகிக்கப்பட்டுவிடுகிறது. உணவின் சுவை பற்றி அங்கிருக்கும் சில ஊழியர்களிடம் கேட்டும் தெரிந்துகொள்ளப்படுகிறது.

சிலர், பொன்னி அரிசி போன்ற குறிப்பிட்ட சிலவகை அரிசிகளில் சமைக்கப்பட்ட உணவை விரும்புவதாகவும் சிலர் அரிசி நன்கு வெந்திருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறப்பட்டது.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஊழியர்கள், உணவு தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் தலைவர் இயோ குவாட் குவாங் கூறினார்.

இந்தியாவைச் சேர்ந்த கட்டுமான ஊழியரான கந்தன் கோபிநாத், 41, தாம் வசிக்கும் பிபிடி லாட்ஜ் 1A விடுதியில் கடந்த வாரத்தைவிட தற்போது உணவின் தரம் மேம்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

சுமார் 300,000 வெளிநாட்டு ஊழியர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசாங்கம், அரசுசாரா அமைப்புகள், முதலாளிகள் ஆகிய தரப்புகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகளில் தங்கியிருக்கும் சுமார் 17,000 ஊழியர்களுக்கு கடந்த மூன்று வாரங்களாக வெளிநாட்டு ஊழியர் ஆதரவு கூட்டணி உணவு வழங்கி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!