அமைச்சர் சண்முகம்: இனவெறி கருத்துகளைப் பதிவிட்டவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியர்களைப் பற்றியும் கொவிட்-19 நோய்த்தொற்று பற்றியும் டுவிட்டரில் இனவெறி கருத்துகளைப் பதிவிட்ட 34 வயது ஆடவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.

பல்வேறு இனங்களுக்கு இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த “அருவருக்கத்தக்க பதிவுகள்” அமைந்ததாக அவர் இன்று (மே 2) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

@sharonliew86 எனும் பெயரில் சில வாரங்களுக்கு முன்பு அந்த ஆடவர் இனவெறி கருத்துகளைப் பதிவிட்டார். ஆனால், அந்தப் பெயர் குறிப்பிடுவதுபோல அவர் ஒரு பெண்ணோ அல்லது சீனரோ அல்ல என்பதைத் திரு சண்முகம் தெளிவுபடுத்தினார்.

பிடோக் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், இதில் சம்பந்தப்பட்ட அந்த ஆடவரை அடையாளம் கண்டுள்ளனர்.

பல்வேறு குழுக்களுக்கிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதங்கள் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!