ஒரு மாதகாலம் நடுக்கடலில் தவித்த சிங்கப்பூரருக்கு ஃபிஜி உதவிக்கரம்

பசிஃபிக் கடலில் நங்கூரமிடுவதற்கு எந்த இடமுமின்றி, சேதமடைந்த உலாக்கப்பலில் தனியாக இருந்த 59 வயது திரு வோங்கிற்கு கைபேசி மட்டும்தான் துணையாக இருந்தது.

"நடுக்கடலில் இருக்கும்போது எப்படி பயப்படுவது? அதில் பயன் இல்லையே," என்று திரு வோங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்குத் தொலைபேசி அளித்த பேட்டியின்போது இவ்வாறு கூறினார்.

மூன்று ஆண்டுகள் கடலில் பயணம் செய்ய நினைத்த அந்த கடலோடியின் பயணம், பிப்ரவரி மாதம் தொடங்கிய பின்னர் தற்போது நிலைகுத்திப் போயுள்ளது. ஒரு மாதத்திற்கு மேல் நடுக்கடலில் சிக்கிய அவரை ஃபிஜி நாட்டின் கடற்காவல் படையின் கப்பல் கரைசேர்த்தது. கொரோனா கிருமித்தொற்று அச்சம் காரணமாக, வேறு சில நாடுகள் திரு வோங்கை தங்களது எல்லைக்குள் நுழைய முன்னதாக அனுமதிக்கவில்லை.

திரு வோங்கிற்கு ஏற்பட்ட நிலையைப் பற்றி தமது ஃபேஸ்புக் பதிவில் விவரித்த வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், ஃபிஜி அரசாங்கம் பெருமுயற்சி எடுத்து உதவியதற்காக நன்றி தெரிவித்தார்.

ஃபிஜியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் இரண்டு நாட்களுக்குக் கண்காணிப்பில் வைக்கப்பட்ட திரு வோங், அங்கிருந்து வெளியேறி தற்போது நலமாக இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார். 'ஸிமூலா' என்ற பெயருள்ள தமது பாய்மரப் படகிற்கு திரு வோங் திரும்புவதற்கு அனுமதி இருந்தாலும், தற்போது ஃபிஜியில் முடக்கப்பட்டிருப்பதால் அவர் குறைந்தது இன்னொரு மாதத்திற்கு அந்நாட்டிலேயே தங்கியிருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் அறைகலன் உற்பத்தி நிறுவனம் ஒன்றை நடத்திவரும் திரு வோங், பிப்ரவரி 2ஆம் தேதி இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து பாய்மரப் படகில் சிங்கப்பூரைவிட்டுப் புறப்பட்டார். மார்ச் 19ஆம் தேதி அவரது இரு நண்பர்களும் தங்களது திட்டத்தின்படி இந்தோனீசியாவின் ஜெயப்புரா நகரில் இறங்கினர்.

திரு வோங் படகில் தனியே பாப்புவா நியூ கினியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அந்நாடு தனது எல்லைகளை மூடிவிட்டதை அறிந்தார். சாலமன் தீவுகளும் துவாலு தீவும் திரு வோங்கை தங்கள் எல்லைகளுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

1,000 லிட்டர் டீசலும் உணவும் வாங்க துவாலு தீவு அதிகாரிகளைச் சம்மதிக்க வைத்த திரு வோங், அதன் பிறகு வேறெங்கு செல்வதென்று தெரியாமல் திணறினார்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சைத் தொடர்புகொள்ளுமாறு தொலைபேசியில் தமது தந்தைத் தம்மிடம் கேட்டுக்கொண்டதாக திரு வோங்கின் 31 வயது மகள் கூறினார். இது குறித்து தமது நாடாளுமன்ற உறுப்பினரிடமும் தெரிவித்ததாகக் கூறிய பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பெண், இந்த விவகாரம் அவசரமாகக் கையாளப்படும் என்று வெளியுறவு அமைச்சு உடனே உறுதியளித்ததை நினைவுகூர்ந்தார். திரு வோங்கிற்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

இவ்வளவும் நடந்தபோதும், தாம் திட்டமிட்டபடி பயணத்தைத் தொடர விரும்புவதாக திரு வோங் கூறினார். "பழுதடைந்த எனது படகைச் சரிசெய்துவிட்டு ஃபிஜியைச் சுற்றிப்பார்க்கப் போகிறேன்," என்று ஃபிஜிக்கு முதல்முறையாக வந்துள்ள திரு வோங் கூறினார்.

"சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு, ஃபிஜி அரசாங்கம் உட்பட எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்," என்று அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!