துணைப் பிரதமர் ஹெங்: நீண்ட போராட்டத்துக்கு மனதளவில் தயாராகுங்கள் 

சிங்கப்பூரில் முதலாவது கொவிட்-19 சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்ட 100வது நாளைத் தொட்டுவிட்ட நிலையில், இது குறித்து கருத்துரைத்த துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், இந்த கொரோனா கிருமி மிகுந்த வீரியம் கொண்டது என்றும் இதை கடுமையான நடவடிக்கைகளைக் கொண்டு கட்டுப்படுத்த வில்லை என்றால் மிக வேகமாகப் பரவிவிடும்
என்றும் தெரிவித்துள்ளார் .

“உலக அளவில் இந்தக் கிருமித் தொற்று எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்று இப் போதை க்கு செல்ல முடியாது. ஆக, மனதளவில் ஒரு நீண்ட போருக்கு நாம் தயாராக வேண்டும். இப்போதைக்கு நாம் நெருக்கடி கட்டத்தைக் கடந்துவிடவில்லை . ஆனால், அதைச் சமாளிக்க நம்மிடம் நிதி வளத்துடன் , பலமும் மீள்திறனும் உள்ளது,” என்று திரு , சண்டே டை ம்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த மெய்நிகர் பேட்டியில் கூறினார்.

“சில நாடுகள் கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஓரளவு வெற்றி பெ ற்றிருந்தாலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பிறகு அது மீண்டும் தலை தூக்கா மல் பார்த்துக்கொள்வதில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்றன. கொரோனா கிருமி விடுக்கும் மிரட்டலை நாம் குறைத்து
மதிப்பிடக்கூடாது,” என்றும் திரு ஹெங் விவரித்தார் .

அந்த வகையில், மொத்தத்தில் சிங்கப்பூர் சில அம்சங்களில் நன்றாகச் செய்துள்ள து. கிருமித் தொற்றால் மாண்டோரின் எண்ணிக்கை குறைவாக உள்ள து. கிருமிக்கெதிரான சோதனை முறையை நாம் விரிவுப்படுத்தியுள்ளோம். சுகாதாரப் பராமரிப்புத் துறை யின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வந்தாலும் கடப்பா டுமிக்க நமது ஊழியர்களால் அது சிறப்பாகச் செயல்பட் டு வருகிறது என்று குறிப்பிட்ட துணைப்பிரதமர், ஒன்றிணைந்த சிங்கப்பூர் என்ற உணர்வு இந்த இக்கட்டான நேரத்திலும் பிரகாசமாக ஒளி வீசுகிறது என்பதால், நெ ருக்கடி காலத்துக்குப் பிறகும் அந்த உணர்வு தொடர்ந்து நம்மை ஒன்றிணை க்கும் என்றும் கூறினார்.

--

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!