வெளிநாட்டு தொடர்புகள் மூலம் நிதி: சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி மறுப்பு

வெளிநாட்டு தொடர்புகள் மூலம் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கு (சிமுக) நிதி கிடைப்பதாகக் கூறப்படுவதில் ஆதாரம் எதுவும் இல்லை என்பதை உள்கட்சி விசாரணை காட்டுவதாக அக்கட்சி கூறியுள்ளது.

இதன் தொடர்பில், சிமுகவிலிருந்து அண்மையில் வெளியேற்றப்பட்ட உறுப்பினர் ஒருவர் கூறியிருந்த கருத்துகளை ஏற்க அக்கட்சி மறுத்துள்ளது.

கட்சியை வீண் பிரச்சினையில் மாட்டிவிட நினைப்பவர்களை அது சகித்துக்கொள்ளாது என்றும் கட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்காத உறுப்பினர்கள் வெளியேற்றப்படுவர் என்றும் சிமுக எச்சரித்துள்ளது.

“சிமுகவில் உள்ள சிலர், வேறு கட்சி உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் சிமுகவுக்கு வெளிநாட்டு தொடர்புகள் மூலம் நிதி கிடைப்பதாகவும் டேனியல் டியோ கூறியிருப்பதை சிமுக மறுக்கிறது,” என்று அக்கட்சி கூறியது.

சிங்கப்பூர் மக்கள் கட்சியின் தலைவர் ஜோசே ரேமண்ட் மற்றும் வரலாற்று ஆய்வாளர் தம் பிங் ஜின் ஆகியோருடன் சிமுகவை சேர்ந்த பத்து உறுப்பினர்கள் தொடர்பில் இருப்பதாகவும் மேற்கத்திய தொடர்புகள்வழி கட்சிக்கு நிதி கிடைப்பதாகவும் கூறும் காணொளி ஒன்றை திரு டேனியல் டியோ, 36, ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் வெளியிட்டிருந்தார். அந்தப் பத்து உறுப்பினர்களின் பெயர்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இதன் தொடர்பில் அந்தப் பத்து கட்சி உறுப்பினர்களில் சிலரும் திரு ஜோசேயும் போலிசாரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிமுகவின் தலைமைச் செயலாளர் டான் செங் போக்கிடம், தாம் காணொளி தயாரித்ததை திரு டியோ பின்னர் ஒப்புக்கொண்டார். அதையடுத்து, இம்மாதம் 1ஆம் தேதி அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். கட்சியிலிருந்து தாம் நீக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டதாக திரு டியோ கூறினார்.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தவர் திரு டியோ.

வேறு ஒரு தரப்பிலிருந்து வந்த தகவலைக் கொண்டு தாம் காணொளியைத் தயாரித்ததாக திரு டியோ சொன்னார். ஆனால், அந்தத் தரப்பு குறித்த மேல் விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

அந்தக் காணொளியில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்த ஒருவருக்கு மட்டுமே அதைத் தாம் அனுப்பியதாகவும் அது இவ்வாறு பலருக்கும் கசிந்துவிட்டதாகவும் திரு டியோ கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!