போலிஸ் அதிகாரி மீது எச்சில் உமிழ்ந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

வெளியே சென்றபோது முகக்கவசம் அணியாத ஆடவர் ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, போலிஸ் அதிகாரி ஒருவரைத் தகாத சொற்களால் திட்டியதுடன், மற்றொரு அதிகாரி மீது அவர் எச்சில் உமிழ்ந்தார்.

இதன் தொடர்பில் சிங்கப்பூரரான 60 வயது பே கியாவ் கெங் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஹவ்காங் அவென்யூ 8, புளோக் 644ல் உள்ள வெற்றுத்தளத்தில் கடந்த சனிக்கிழமை காலை 9 மணியளவில் முகக்கவசம் அணியாமல் சென்ற பே, போலிசாரால் பிடிபட்டார்.

போலிஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டபோது, அங்கிருந்த போலிஸ் அதிகாரியைத் தகாத வார்த்தைகளால் பே திட்டியதாகக் கூறப்படுகிறது. உட்லண்ட்ஸ் போலிஸ் பிரிவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பே, அங்கிருந்த மற்றொரு அதிகாரியின் வலது கையில் எச்சில் உமிந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக வேறொரு குற்றத்திற்கு பே சிறைத் தண்டனையை நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அதன் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதியிலிருந்து இவ்வாண்டு ஜூலை 27ஆம் தேதி வரை பே எந்தவொரு குற்றமும் புரியக்கூடாது. ஆனால், அந்த உத்தரவை அவர் மீறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இப்போது அவர் புரிந்துள்ள குற்றம் நிரூபணமானால், கூடுதலாக 87 நாட்கள் அவர் சிறைத் தண்டனையை நிறைவேற்ற வேண்டியிருக்கும்.

மனநலக் கழகத்தில் மனநலப் பரிசோதனைக்கு பே உட்படுத்தப்படுவார். அவரது வழக்கு விசாரணை இம்மாதம் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!