கொரோனாவிலிருந்து காக்கும் என விளம்பரம்; 1,600 விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை

கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பாக தவறான கோரிக்கைகளுடன் விற்பனைக்குப் பட்டியலிடப்பட்ட 1,700க்கு மேற்பட்ட பொருட்களை உள்ளூர் இணையத்தளங்களில் இருந்து சுகாதார அறிவியல் ஆணையம் அகற்றியது.

அவற்றுள் $10 முதல் $290 வரை விலைமதிப்பு கொண்ட சட்டவிரோத கொவிட்-19 பரிசோதனைக் கருவிகளும் அடங்கும்.

அத்தகைய பொருட்கள் விற்பனை தொடர்பாக 1,600க்கு மேற்பட்ட விற்பனையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஆணையம் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி இருக்கிறது.

கொரோனா கிருமித்தொற்றில் இருந்து காக்கும் எனக் கூறி, மூலிகை மருந்துகள், ‘புரோபயோட்டிக்ஸ்’, சுகாதாரத் துணைபொருட்கள் என பல பொதுவான சுகாதாரப் பொருட்கள் குறித்த பொய்யான விளம்பரங்களை நிறுவனங்கள் வெளியிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.

இதையடுத்து, கடைகளிலும் இணையவழி வர்த்தகத் தளங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ள ஆணையம், தவறான கோரிக்கைகளை விடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருக்கிறது.

கொவிட்-19 தொடர்பாக வெளியிடப்படும் எந்த ஒரு கோரிக்கைக்கும் உரிய அறிவியல்பூர்வமான சான்று வேண்டும் என்றும் அத்தகைய கோரிக்கைகள் முதலில் ஆணையத்தால் மதிப்பிடப்பட்டு, பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

கொரோனா கிருமித்தொற்றைத் தடுக்கும் அல்லது குணப்படுத்தும் என பொய்யாக விளம்பரம் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட விற்பனையாளருக்கு ஓராண்டு வரை சிறை, $20,000 வரை அபராதம் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!