பூச்சிகள், எலிகளுக்கு எதிரான சோதனையை நிறுத்தியதால் கிருமி பற்றிய கவலை அதிகரிப்பு

உணவங்காடிக் கடைகளிலும் சில உணவகங்களிலும் கரப்பான்பூச்சி, எலிகளுக்கு எதிரான சோதனை தற்போது நிறுத்தப்பட்டிருப்பதால் கிருமித்தொற்று கவலை தலைதூக்கி உள்ளது.

கடைத் தொகுதிகள் மற்றும் வீடமைப்புப் பேட்டைகளில் உள்ள சில உணவகங்கள், காப்பிக்கடைகள் ஆகியவை பூச்சிக்கொல்லி சேவையை நிறுத்திக்கொண்டதால், அதன் மூலம் புதிய கிருமித் தொற்று தலையெடுக்கும் சாத்தியத்தை நிராகரிப்பதற்கில்லை என்று பூச்சிக்கொல்லிக் கட்டுப்பாட்டு நடத்துநர்கள் தெரிவித்துள்ளனர்.

“உணவு, பானத்துறையில் உள்ள தனது வாடிக்கையாளர்களில் 12 பேர் தங்கள் சேவையைப் பயன்படுத்துவதில்லை . சிலர் செலவு கருதி அவ்வாறு செய்கின்றனர். சிலர் நோய் முறியடிப்புக் காலத்தில் தங்கள் வர்த்தகத்தை மூடி வைத்து உள்ளனர்,” என்றார் பெஸ்ட்வொர்க்ஸ் சொலுஷன்ஸ் நிறுவனத்தின் திரு எட்வின் குவேக் .

“நோய் முறியடிப்புக் காலத்தில் பலர் தங்கள் உணவு வர்த்தகங்களை நிறுத்திவைத்திருப்பதால், அங்கு பூச்சி, எலித் தொல்லைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நோய் முறியடிப்புக் காலம் அறிவிக்கப்பட்ட சில நாட்கள் கழித்து தனது வாடிக்கையாளர்களின் வர்த்தக இடங்களில் அதிக அளவில் கரப்பன்பூச்சிகளும் எலிகளும் தென்பட்டதாகக் கூறினார் எஃபிகஸ் பூச்சிக்கொல்லி நிறுவனத்தின் நிறுவனர் திரு பெர்னார்ட் சான்.

நோய் முறியடிப்புக் காலத்தில் பல உணவுக் கடைகள் மூடப்பட்டிருந்தாலும் அதன் உரிமையாளர்கள் மாதம் ஒரு முறையாவது தங்கள் கடைகளில் பூச்சிகள் எலிகள் போன்றவற்றுக்கு எதிரான சேவைப் பயன்படுத்தி அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாதவர்கள்
குற்றம் இழைத்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!