செய்திக்கொத்து - சிங்கப்பூர் - 8-5-2020

சுவா சூ காங், புக்கிட் பாத்தோக் நகரங்களில் டெங்கிக்கு எதிரான போர்

டெங்கி நோய்க்குக் காரணமான ஏடிஸ் கொசுக்களை ஒழித்துக்கட்ட உருவாக்கப்பட்டுள்ள ‘புரோஜெக்ட் வொல் பாக்கியா’ திட்டம் அடுத்து சுவா சூ காங், புக்கிட் பாத்தோக் நகரங்களில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த நாடு பல்வேறு சவால்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும் வேளை யில், இன்னொரு பக்கம் டெங்கி சம்பவங்களின் எண்ணிக் கையும் அதிகரித்துக்கொண்டு வருவது மேலும் கவலை அளிக்கிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வொல் பாக்கியா கிருமியைச் சுமந்து செல்லும் ஆண் கொசுக்கள் பெண் கொசுக்களுடன் இனப் பெருக்கத்தில் ஈடுபட, விடப்படு கின்றன. அவ்வாறு இனப்பெருக்கத்தில் ஈடுபடும் பெண் கொசுக்களின் முட்டைகள் குஞ்சு பொரிக்காது என்று இது குறித்து 2012ஆம் ஆண்டிலிருந்து ஆய்வு நடத்திவரும் தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.

சுவா சூ காங், கியட் ஹோங், ஹோங் கா நார்த் ஆகிய நகரங்களில் உள்ள 200க்கு மேற்பட்ட புளோக்குகளில் இந்த மாதத்தில் ஆண் வொல்பாக்கியா-ஏடிஸ் கொசுக்கள் விடப்படும் என்று குறிப்பிட்ட வாரியம், இந்தப் பகுதிகளில் ஏடிஸ் கொசு இனப்பெருக்கம் அதிகரித்து காணப்படுவ தால், இந்தப் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன என்றும் விளக்கமளித்தது.


பாதுகாப்பு இடைவெளி விதியை மீறிய இரு நிறுவனங்களுக்கு அபராதம்

தங்கள் வேலையிடங்களில் பாதுகாப்பு இடைவெளியை உறுதி செய்யத் தவறிய இரு நிறுவனங்களுக்குத் தலா $1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்தது.

‘குட்மென் என்வைரன்மெண்டல் குழுமம்’, ‘த பேக்கரி டெப்போ’ ஆகியவையே அந்த இரு நிறுவனங்கள். கடந்த இரண்டு நாட்களாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு 20 வேலையிடங்களைச் சோதனையிட்டது.

‘குட்மென் என்வைரன்மெண்டல் குழுமம்’, தனது வேலையிடத்தில் ஊழியர்களுக்காக சுகாதார மற்றும் உடல் வெப்பச் சோதனைகளையும் பாதுகாப்பு இடைவெளி விதி யையும் அமல்படுத்தத் தவறியது. வெவ்வேறு நேரங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் முறையான குறிப்புகளையும் அது வைத்துக்கொள்ளவில்லை.

சிடேலி பேக்கரி மற்றும் உணவகத் தொடரை நடத்தும் ‘த பேக்கரி டெப்போ’ தனது ஊழியர்களை வெவ்வேறு கிளைகளில் வேலை செய்ய அனுப்பியுள்ளது. அது முறை தடை செய்யப்பட்டிருந்தது. மேலும் தனது வேலையிடத்தில் ஊழியர்களிடையே முகக்கவசம் அணிவதையும் பாதுகாப்பு இடைவெளி விதியையும் அமல்படுத்தத் தவறியது.

கொவிட்-19 தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற தவறும் நிறுவனங்கள் அபராதம், வேலைத் தடை உத்தரவு ஆகியவற்றுடன் நீதிமன்றக் குற்றச்சாட்டையும் எதிர்நோக்கலாம் என்றும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு கூறியது.


பூச்சிகள், எலிகளுக்கு எதிரான சோதனையை நிறுத்தியதால் கிருமி பற்றிய கவலை அதிகரிப்பு

உணவங்காடிக் கடைகளிலும் சில உணவங்களிலும் கரப்பான்பூச்சி, எலிகளுக்கு எதிரான சோதனை தற்போது நிறுத்தப்பட்டிருப்பதால் கிருமித்தொற்று கவலை தலைதூக்கி உள்ளது.

கடைத்தொகுதிகள் மற்றும் வீடமைப்புப் பேட்டைகளில் உள்ள சில உணவகங்கள், காப்பிக் கடைகள் ஆகியவை பூச்சிக்கொல்லி சேவையை நிறுத்திக்கொண்டதால், அதன் மூலம் புதிய கிருமித்தொற்று தலையெடுக்கும் சாத்தியத்தை நிராகரிப்பதற்கில்லை என்று பூச்சிக்கொல்லிக் கட்டுப்பாட்டு நடத்துநர்கள் தெரிவித்துள்ளனர்.

“உணவு, பானத்துறையில் உள்ள தனது வாடிக்கையாளர் களில் 12 பேர் தங்கள் சேவையைப் பயன்படுத்துவதில்லை. சிலர் செலவு கருதி அவ்வாறு செய்கின்றனர். சிலர் நோய் முறியடிப்புக் காலத்தில் தங்கள் வர்த்தகத்தை மூடி வைத்து உள்ளனர்,” என்றார் பெஸ்ட்வொர்க்ஸ் சொலியூஷன்ஸ் நிறுவனத்தின் திரு எட்வின் குவேக்.

“நோய் முறியடிப்புக் காலத்தில் பலர் தங்கள் உணவு வர்த்தகங்களை நிறுத்தி வைத்திருப்பதால், அங்கு பூச்சி, எலித் தொல்லைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நோய் முறியடிப்புக் காலம் அறிவிக்கப்பட்ட சில நாட்கள் கழித்து தனது வாடிக்கையாளர்களின் வர்த்தக இடங்களில் அதிக அளவில் கரப்பான்பூச்சிகளும் எலிகளும் தென்பட்டதாகக் கூறினார் எஃபிகஸ் பூச்சிக்கொல்லி நிறுவனத்தின் நிறுவ னர் திரு பெர்னார்ட் சான்.

நோய் முறியடிப்புக் காலத்தில் பல உணவுக் கடைகள் மூடப்பட்டிருந்தாலும் அதன் உரிமையாளர்கள் மாதம் ஒரு முறையாவது தங்கள் கடைகளில் பூச்சிகள் எலிகள் போன்ற வற்றுக்கு எதிரான சோதனையை மேற்கொண்டு அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாத வர்கள் குற்றம் இழைத்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!