சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை இம்மாதத்தில் 40,000ஐ எட்டக்கூடும்

இம்மாதத்தில் சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 30,000லிருந்து 40,000ஐ எட்டக்கூடும்.

இருந்தாலும் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளால் நிலைமை கைமீறிப் போவதைத் தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், அண்மையில் அது நிலையடைந்து உள்ளதைச் சுட்டினார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் ஆய்வுத்துறை துணைத் தலைவர் இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக்.

“சம்பவங்களின் எண்ணிக்கை கூடினாலும் அது கட்டுக்குள் இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன என்று குறிப்பிட்ட பேராசிரியர் குக், ஏப்ரல் மாத இறுதிக்குள் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 10,000லிருந்து 20,000ஐ எட்டக்கூடும் என்று இதற்கு முன்னதாக கணித்திருந்தார்.

ஜனவரி 23ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முதல் கொரோனா கருமித்தொற்று சம்பவம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஏப்ரல் 22ஆம் தேதி 10,000ஆவது சம்பவம் அடையாளம் காணப்பட 13 வாரங்கள் பிடித்தன.

இருப்பினும், அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு எண்ணிக்கை 20,000ஐத் தொட்டுவிட்டது. ஆனால், புதிய சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களாக 1,000க்குக் கீழ் இருந்து வந்துள்ளது. ஆக உயர்ந்த எண்ணிக்கையாக 1,426 சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன.

கொள்ளைநோய் தொடர்பில் பொதுவான போக்கைப் பார்க்கும்போது, சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. ஆனால், சிங்கப்பூரைப் பொறுத்தவரை அது நிலையாக உள்ளது.

கிருமித்தொற்று சம்பவங்களின் அன்றாட நிலையை வைத்து பார்க்கும்போது, இம்மாத இறுதிக்குள் சம்பவங்களின் எண்ணிக்கை 30,000 அல்லது 40,000ஐத் தொடக்கூடும். அதுவே நமக்கு வெற்றியாகக் கருதப்படும். காரணம் பொதுவாக கொள்ளைநோய் அதிவேகத்தில் பரவும் குணமுடையது என்றும் பேராசிரியர் குக் விளக்கினார்.

“ஊழியர் தங்கும் விடுதிக்கு உள்ளேயும் வெளியேயும் கிருமித்தொற்று சம்பவங்களை அடையாளம் காணுதல், தனிமைப்படுத்துதல், தொடர்புகளின் தடங்களைக் கண்டறிதல், தொடர்புகளைக் கண்காணித்தல் ஆகியவை மூலமாகக் கட்டுப்படுத்தலாம்.

“இந்த முறை நடப்பில் இருக்கும் வேளையில், அன்றாட சமூகத் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்டதுபோல பூஜ்யத்தை அடைய நல்ல வாய்ப்புள்ளது. இதேபோன்ற பெரிய அளவிலான அணுகுமுறையை ஊழியர் தங்கும் விடுதியில் நடைமுறைப்படுத்தினால் நல்ல பலன் கிட்ட வாய்ப்புள்ளது,” என்று கருத்துரைத்தார் என்யுஎஸ் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியின் பேராசிரியர் பால் தம்பையா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!