வரலாற்றில் முதன்முறையாக முழு ஆண்டு நிகர இழப்பை எதிர்பார்க்கும் எஸ்ஐஏ

கொரோனா கிருமித்தொற்று காரணமாக விமானப் போக்குவரத்து துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் அதன் வரலாற்றில் முதன்முறையாக ஆண்டு முழுவதுக்குமான நிகர இழப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டு மார்ச் மாதம் முடிவடைந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நிதி நிலவரம் வலுவாக அமைந்திருந்தபோதும், நிகர நஷ்டத்தை எஸ்ஐஏ முன்னுரைத்துள்ளது.

எஸ்ஐஏ குழுமத்தின்கீழ் எஸ்ஐஏ, சில்க்ஏர், மலிவுக் கட்டண விமானச் சேவை வழங்கும் ஸ்கூட் ஆகிய விமானங்கள் இயங்குகின்றன. இந்நிலையில், முழு ஆண்டிற்கான சிறிய அளவிலான நடைமுறை லாபம் எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.

கொவிட்-19 நிலவரம் மேம்படுவதற்கான உறுதியான அறிகுறிகள் இன்னும் தென்படாத நிலையில், இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நடைமுறை ரொக்கப் பரிவர்த்தனை பூஜ்ஜியத்துக்குக் கீழ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டிற்கான முழு நிதி விவரங்கள் இம்மாதம் 14ஆம் தேதி வெளியிடப்படும்.அடுத்த மாதம் இறுதி வரை விமானச் சேவைகளை எஸ்ஐஏ குறைத்துள்ளதைத் தொடர்ந்து மேற்கூறப்பட்ட இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மார்ச் மாதம் எரிபொருள் விலை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து நிதி நிலவரம் மோசமடைந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியது.

விமானப் போக்குவரத்துக்கான தேவை கணிசமாகக் குறைந்துள்ளதால், எஸ்ஐஏ உட்பட ஏராளமான விமான நிறுவனங்கள் அவற்றின் சேவையைக் குறைத்துள்ளன. எஸ்ஐஏ, சில்க்ஏர் விமானங்களில் 4 விழுக்காடு மட்டும் தற்போது பறக்கின்றன. ஸ்கூட் விமானங்களில் 2 விழுக்காடு மட்டுமே அடுத்த இரு மாதங்களில் பறக்கவிருக்கின்றன.
“கொவிட்-19 நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான கால அவகாசம் நிச்சயமில்லாமல் உள்ளது. தற்போதைய சூழலில், செலவைக் குறைப்பதிலும் நிதியிருப்பைப் பாதுகாப்பதிலும் எஸ்ஐஏ குழுமம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது,” என்று அந்நிறுவனம் கூறியது.

கொவிட்-19க்கு பிந்தைய காலகட்டத்திற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள, தனது செயல்முறைகளின் அனைத்து அம்சங்களை இந்நேரத்தில் மறுஆய்வு செய்ய பணிக்குழு ஒன்றை அந்நிறுவனம் அமைத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!