அனைத்து தாதிமை இல்லவாசிகள், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை

தாதிமை இல்லங்களில் பணி புரியும் அனைத்து ஊழியர்களும் இல்லவாசிகளும் கொவிட்-19 கிருமித்தொற்று பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

தீவிர மூச்சுத் திணறல் உள்ளவர்கள் முதலில் சோதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாதிமை இல்லவாசிகளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கும் ஊழியர்கள் தாதிமை இல்லங்களிலேயே ஒதுக்கப்பட்ட தனி இடங்களில் தங்குவர் அல்லது ஹோட்டல்களில் தங்குவர். அவர்கள் சிறப்பு பேருந்தில் தங்கள் பணியிடங்களுக்குச் செல்வர்

கிருமி தொற்றியவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கொவிட்-19 கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் இறந்தவர்களில் 90 விழுக்காட்டினர் 60 வயதைக் கடந்தவர்கள். கிருமி தொற்றிய ஆறில் ஒரு முதியவருக்கு நோய் அதிகம் பாதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட வேண்டி இருந்தது.

நேற்று நடந்த அனைத்து அமைச்சுகள் பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தின்போது அமைச்சர் கான் இந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். இதனால்தான் முதியோரைப் பாதுகாக்க கூடுதல் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் உள்ள 80 தாதிமை இல்லங்களிலும் பணிபுரியும் 9,000 தாதியர்கள், அங்கு வசிக்கும் 16,000 இல்லவாசிகள் ஆகியோருக்கு கொரோனா கிருமித்தொற்று பரிசோதனை கடந்த புதன்கிழமை தொடங்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!