தாதிமை இல்லப் பணியாளர் ஒருவருக்கும் கிருமி பாதிப்பு

வெள்ளிக்கிழமையன்று உறுதிசெய்யப்பட்ட 768 புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் தாதிமை இல்லத்தின் பணியாளர் ஒருவரும் அடங்குவார். பிலிப்பீன்சை சேர்ந்த 34 வயது மாதான அவர், ரென் சி மருத்துவமனையின் கீழ் இயங்கிவரும் தாதிமை இல்லத்தில் வேலை செய்பவர்.

தேசிய தொற்று நோய் நிலையத்தில் சேர்க்கப்படுவதற்கு முன், இவர் வேலைக்குச் சென்றதாகவும் தாதிமை இல்லத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றியதாகவும் மருத்துவமனை அதன் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தது.

இல்லவாசிகளுக்குப் பணிவிடை செய்தபோது அவர் முறையான பாதுகாப்புச் சாதனங்களை அணிந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.

இதற்கிடையே கடந்த 28 நாட்களாக புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் ஏதும் உறுதிசெய்யப்படாத நிலையில் டோவர் கோர்ட் அனைத்துலக பள்ளி, குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையக் கட்டடம் மற்றும் லீ ஆ மோய் முதியோர் இல்லம் ஆகிய மூன்று கிருமித்தொற்று குழுமங்களும் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!