‘அதிகாரிகள் இல்லங்களைச் சோதனையிடுவது வதந்தியே’

நோன்புப் பெருநாளன்று போலிஸ் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று நோய்ப்பரவலை முறியடிக்கும் நடவடிக்கைகளை மீறுவோரைக் கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிடுவதாகப் பரவி வரும் செய்தி, வதந்தியே எனக் கூறி போலிசார் மறுத்துள்ளனர்.

“தயவுசெய்து பொய்யான வதந்திகளைப் பரப்பவேண்டாம். தயவுசெய்து பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ளுங்கள். சொந்த வீட்டில் தங்காத குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் சந்திக்காதீர்கள்,” என்று போலிசார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தனர். வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவிவரும் இத்தகைய புரளிகளை போலிசார் மறுத்துக் கூறியது இது முதன்முறையல்ல.

கிருமிப்பரவலை முறியடிப்பதற்கான விதிமுறைகளை மக்கள் மீறுகிறார்களா என போலிசார் மும்முரமாகக் கண்காணிக்கவில்லை என ஏப்ரல் 14ஆம் தேதியன்று போலிசார் தெரிவித்தனர். ஆயினும், மற்ற புகார்களைக் கையாள்வதுடன் இதுபோன்ற சம்பவங்களைக் கேள்விப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
போலிசார் வீடு வீடாகச் சென்று இதன் தொடர்பில் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறுஞ்செய்திகள் சில வலம் வந்தன.

“இது உண்மையல்ல. ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தவேண்டாம்,” என்று போலிஸ் அப்போது அறிக்கையின்மூலம் அறிவுறுத்தியிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!