கொவிட்-19 சூழலில் மாறுபட்ட அன்னையர் தினம்

அனைத்து அன்னையரையும் சிறப்பிக்கும் ஒரு நாளான அன்னையர் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. ஆனால் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு இடையே அன்னையர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தவாறு வேலை செய்யும் தாய்மார்கள் வேலையையும் வீட்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாத நிலை இப்போது ஏற்பட்டு உள்ளதாக பிரதமர் லீ சியன் லூங் தம் ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று பதிவிட்டிருந்தார்.

வீட்டு வேலைகளைப் பார்த்தபடி ஆசிரியர், பயிற்றுவிப்பாளர், தன்முனைப்பாளர் எனப் பல பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு தங் களின் அலுவலகப் பணிகளிலும் ஈடுபடுகின்ற அன்னையருக்கு பிரதமர் லீ தம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

கொவிட்-19 சூழலால் அன்னையர் தினம் சற்று வித்தியாசமாக கொண்டாடப்படுவதை அவர் சுட்டினார். பெருமளவில் குடும்ப உறுப்பினர்களுடன் கூடிக் கொண்டாட முடியாவிட்டாலும் காணொளி மூலம் அவ்வாறு செய்யலாம் என்றும் வேறு புதுமையான வழிகளில் தாயாருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
குடும்பங்கள் முடிந்தவரை கொவிட்-19 நெருக்கடியைச் சமாளித்தவாறு உற்சாகமாக இருந்து வருவதைப் பற்றி தமது அன்னையர் தினச் செய்தியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஃபேஸ்புக் மூலம் கூறியிருந்தார். குடும்பத்தாரைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க அன்னையர் மீள்திறனுடன் செயல்படுவதைக் குறிப்பிட்டு தமது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் பெண் அமைச்சர்களும் மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து அன்னையர் தினக் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாண்டு அன்னையர் தினத்துக்காக மக்களைச் சந்தித்துக் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளபோதும் அன்பு, மீள்திறன் மற்றும் நம்பிக்கையுடன் திகழும் சிங்கப்பூரிலுள்ள தாய்மார்களுக்கு நன்றி சொல்ல தாங்கள் கடமைப்பட்டிருப்பதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, இந்தக் காணொளியுடன் இணைக்கப்பட்ட தம் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் சுகாதாரப் பணியாளர்கள், தாதியர், மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள், சமூகப் பணியாளர்கள், சீருடை அமைப்புப் பணியாளர்கள் போன்ற முன்னிலை ஊழியர்களாகப் பணியாற்றும் அன்னையர் அனைவருக்கும் குறிப்பாக தாங்கள் வாழ்த்துத் தெரிவிக்க விரும்புவதாக திருமதி டியோ குறிப்பிட்டார்.

இந்தக் காணொளியின் இறுதியில் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா, ‘அன்னையர் தின வாழ்த்துகள்’ எனத் தமிழில் கூறி வாழ்த்தினார். “அனைத்து இனத்தவரும் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தவே தமிழில் பேசினேன், இந்திய அடித்தளத் தலைவர் ஒருவரிடமிருந்து இந்த வாழ்த்தைக் கூற ‘வாட்ஸ்அப்’ ஒலிப்பதிவு மூலம் கற்றுக்கொண்டேன்,” என்று அவர் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

கூடுதல் செய்தி: கி.ஜனார்த்தனன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!