நார்த்பாய்ண்ட் சிட்டியின் துப்புரவு பணியாளர்கள் இருவருக்கு கிருமித்தொற்று

கொவிட்-19 கிருமித்தொற்றால் நார்த்பாய்ண்ட் சிட்டியில் வேலை செய்யும் இரண்டு துப்புரவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது. இத்துடன் ஈசூனில் உள்ள இக்கடைத்தொகுதியின் கிருமித்தொற்று குழுமம் 18 சம்பவங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்ற மாதம் 25ஆம் தேதிஅன்று நார்த்பாய்ண்ட் சிட்டி, கிருமித்தொற்று குழுமமாக அடையாளம் காணப்பட்டது. இக்குழுமத்தில் சேர்ந்துள்ள இரு துப்புரவாளர்களும் சிங்கப்பூரர்கள். ஒருவருக்கு வயது 60 என்றும் மற்றொருவருக்கு 77 என்றும் அறியப்படுகிறது.

அத்துடன் இவ்விரு ஆடவர்களும் கொவிட்-19 பாதிப்புக்கு உள்ளாகியவர்களுடன் தொடர்பில் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இவர்களையும் சேர்த்து நேற்று முன்தினம் பதிவான 753 புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் ஒன்பது பேர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள். அதில் ஐவர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். நார்த்பாய்ண்ட் சிட்டியின் இரு துப்புரவாளர்களைத் தவிர ஆதரவற்றோருக்காக இயங்கி வரும் அகாசியா இல்லவாசி, 82 வயது ஆடவர் ஒருவருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

இத்துடன் அவ்வில்லத்தில் 16 கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதியாகியுள்ளன.

கொவிட்-19 பாதிப்பால் உயி ரிழக்கும் அபாயம் முதியோருக்கு அதிகம் உண்டு என்பதை அனைத்துலக ஆய்வுகள் கூறுகின்றன. இதன் பொருட்டு நம் மூத்த குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கிருமித் தடுப்பைச் சமாளிப்பதற்காக அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலை பணிக்குழு வலியுறுத்தி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!