மூவர் கைது செய்யப்பட்டதையடுத்து மேலும் சந்தேக நபர்களைத் தேடிவரும் போலிசார்

பீபள்ஸ் பார்க் செண்டர் தனியார் குடியிருப்புக் கட்டடத்தில் நேற்று முன்தினம் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்ததையடுத்து இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் நடந்த இச்சம்பவம் தனியார் குடியிருப்பு வளாகத்தின் உள் அமைப்புப் புகைப்படக் கருவியில் (சிசிடிவி கேமரா) பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களிலும் வாட்ஸ்அப் குழுக்களிலும் வலம் வந்துள்ளது.

கிட்டத்தட்ட ஒரு நிமிடம் நீடிக்கும் காணொளியில் பாராங் ஆயுதம் ஏந்திய ஒரு சாரார் மற்றொரு குழுவினரை தாக்குவது தெரிவதாகக் கூறப்பட்டது.

சுயநினைவுடன் இருந்த 19 வயது ஆடவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாகவும் சம்பவ இடத்திலேயே மூவர் கைது செய்யப்பட்டதாகவும் கலவரத்தில் ஈடுபட்ட மற்றவர்களைக் கைது செய்ய தேடுதல் வேட்டையில் போலிசார் இறங்கியுள்ளதாக போலிஸ் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறியுள்ளார்.

காயம் ஏற்பட்டுள்ள ஆடவரை பாராங் ஏந்திய குறைந்தது மூவர் தாக்கியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

கேமரா பதிவின்படி சம்பவ இடத்தில் குறைந்தது 10 பேர் இருந்திருப்பது தெரியவந்துள்ளது.

கலவரத்தின்போது ஆடவரால் ஒரு மாது இழுத்துச்செல்லப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

கண்டோமினியத்தின் 15ஆம் தளத்தில் நடந்த கலவரம் அதிகாலை 3.30மணிக்குச் சற்று முன்னர் தொடங்கியுள்ளது.

அப்பர் கிராஸ் ஸ்திரீட்டில் உள்ள கண்டோமினியத்தில் கலவர சம்பவத்திற்காக அப்போது போலிசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!