900 மாணவர்களுக்கு இனிப்புத் தொகுப்பு

நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருக்கும் இவ்வேளையில் ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி மாணவர் கைச்செலவு நிதி’ மூலம் பலன்பெறும் 900 மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக இனிப்புப் பண்டங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

சோயா அவரையை மையமாகக் கொண்ட உணவு, பான சில்லறை விற்பனையாளரான ‘மிஸ்டர் பீன்’ நிறுவனத்தின் தயாரிப்புகள் அந்த இனிப்புத் தொகுப்பில் இடம்பெற்று இருக்கும். இந்த 900 தொகுப்புகளுக்கான மொத்த செலவு $40,000 எனத் தெரிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக, குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு நேற்றுக் காலையில் இனிப்புத் தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டன.
அந்தத் தொகுப்புகளைப் பெற்ற மாணவர்களில் ஒருவரான 11 வயது ஜாக்சன் லோ கூறுகையில், “நொறுக்குத்தீனிகள் அடங்கிய தொகுப்பு கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனெனில், எங்களால் அடிக்கடி இவற்றை வாங்க இயலாது,” என்றார்.

எஞ்சிய தொகுப்புகள் படிப்படியாக ஒரு வார காலத்தில் விநியோகிக்கப்படும். ‘ஃபியூச்சரெடி ஏஷியா’வின் நன்னடத்தை, தலைமைத்துவப் பயிலகத்தைச் சேர்ந்த தொண்டூழியர்கள் 24 பேர் இனிப்புத் தொகுப்பு விநியோகப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் திட்டம் குறித்துக் கருத்துரைத்த ‘மிஸ்டர் பீன்’ நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான லோ ஜுவீ போ, “வீட்டிற்குள்ளேயே இரண்டு மாத காலம் அடைந்து கிடப்பது என்பது பெரும்பாலான குழந்தைகளுக்குச் சவாலாக இருக்கும். அதனால்தான், இனிப்பான அதே நேரத்தில் ஆரோக்கியமான தின்பண்டங்களை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்துவது எனத் தீர்மானித்தோம்,” என்றார்.

கைச்செலவு உதவிநிதி பெறும் மாணவர்களின் குடும்பங்கள், கொவிட்-19 பரவல் காலகட்டத்தில் செலவுகளைச் சமாளிக்க சிரமப் படுவதாக அந்த உதவிநிதித் திட்டத்தின் தலைமை மேலாளர் டான் பீ ஹியோங் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!