பொங்கோல் ஃபீல்டில் கத்திக்குத்துபட்ட ஆடவரின் சடலம் எரியூட்டப்பட்டது

பொங்கோல் ஃபீல்டில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் “மிகவும் அநியாயமானது,” என்று அந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் 38 வயதான திரு டே ருய் ஹாவோ என்று அறியப்படுகிறது.

திருமணமான திரு டே மனைவியுடன் வசித்து வந்தார். அந்தப் பகுதியில் இருக்கும் விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்கும் நிறுவனக் கிளையில் பணியாற்றி வந்தார் அவர்.

சம்பவத்தன்று (மே 10) ஓட்டப் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக தமக்கு செய்தி அனுப்பினார் என்று திரு டேயின் தந்தை சீன நாளிதழ்களான லியன்ஹ வான்பாவ், ஷின் மின் டெய்லி ஆகியவற்றிடம் குறிப்பிட்டார்.

இரவு 10 மணியளவில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்ட அவர், வீட்டிலிருந்து 2 தெருக்கள் தள்ளியிருந்த பொங்கோல் ஃபீல்ட் பகுதியில் ஒரு பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் கத்திக்குத்துகளுடன் நிலைகுலைந்து கிடந்ததை இரவு 11 மணியளவில் அந்தப் பகுதி குடியிருப்பாளர் ஒருவர் கண்டார். மட்டில்டா சன்டெக் வீடமைப்பு வளர்ச்சிக் கழக கட்டுமானத் தளத்துக்கு அருகில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

"சம்பவத்தைப் பார்த்தவர்கள் தகவல் அளியுங்கள்; என் மகனின் ஆன்மா சாந்தியடையட்டும்," என்று திரு டேயின் தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

அந்த குடியிருப்பாளர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் போலிசார். செங்காங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட திரு டே, பின்னிரவு 1 மணியளவில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் முன்னே அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இன்று பிற்பகலில் அவரது உடல் மண்டாய் தகனச் சாலையில் எரியூட்டப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தில் நேற்று போலிசரும் கூர்க்கா பிரிவினரும் ஆதாரங்களைத் திரட்ட தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவத்தின் தொடர்பில் துப்பு கொடுக்க விரும்புவோர் 1800-255-0000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்; அல்லது இணையம் வழியாக தகவல்களைச் சமர்ப்பிக்கலாம். ரகசியம் காக்கப்படும் என்று போலிசார் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!