பொருள் கொடுத்து மகிழ்விக்கும் மருத்துவமனை

சுகாதார ஊழியர்களுக்கு ஆதரவும் நன்கொடையும் கடந்த மூன்று மாதமாக குவிந்து வருவதை அடுத்து டான் டோக் சேங் மருத்துவமனை 10,000க்கும் அதிகமான ஊழியர்களுக்கு சில பராமரிப்புப் பொருட்களை மே தினம் விநியோகம் செய்துள்ளது.

முகக்கவசங்கள், வைட்டமின் சீ பானங்கள், லாஸஞ்சஸ், மறுபயனீடூ செய்யக்கூடிய உணவு உபகரணங்கள்,நொறுக்குத் தீனிகள் உள்ளிட்ட சில பொருட்களை அம்மருத்துவமனை வழங்கியது.

"பணியாளர்கள் தங்களது ஓய்வு நேரங்களில் இந்தப் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். நோயாளி சேவையாளர்கள், நிர்வாக உதவியாளர்கள் உள்ளிட்ட உதவி பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்," என்று அந்த மருத்துவமனையின் ஊழியர்நலன் செயற்குழு உறுப்பினர் டோமினிக் டுங் தெரிவித்தார்.

இந்தப் பொருட்களைப் பெற்ற ஊழியர்களில் ஒருவரான நோயாளி தகவல் நிர்வாகி திருவாட்டி விக்னேஸ்வரி, பொதுமக்கள் காட்டும் அக்கறையால் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். "தற்போதைய சூழலில் வைட்டமின் 'சி' கிடைப்பது அரிது என்பதால் இந்த ஏற்பாடு எனக்கு வசதியாக உள்ளது," என்று திருவாட்டி விக்னேஸவரி கூறினார்.

"அத்தியாவசியப் பொருட்களை வாங்க முன்னிலை ஊழியர்களுக்கு நேரம் இல்லாததால் இது எங்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது," என்று விநியோக உதவியாளர் திரு ஜோஷுவா குணசேகரன் தெரிவித்தார்.

மருத்துவமனை ஊழியர்களுடன் சிங்கப்பூரின் உள்கட்டமைப்பைக் கட்டி மேம்படுத்துவதில் பெரிதும் பங்காற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் டான் டொக் சேங் மருத்துவமனை பொருள் கொடுத்து உதவுகிறது. இந்த முயற்சியில் எம்டிஆர் உணவகமும் இணைந்து ஊழியர்களுக்குச் சிற்றுண்டி வழங்குகிறது.

"இந்த உதவி கிடைக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மருத்துவமனை எங்களைக் கருத்தில்கொண்டு உதவி செய்ததற்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன், "என்று வெளிநாட்டு ஊழியரும் நோயாளியுமான திரு ஏகாம்பரம் கோவிந்தராஜூ தெரிவித்திருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!