இம்மாத இறுதிக்குள் 20,000 ஊழியர்கள் குணமடைந்து தங்குமிடம் திரும்புவர்

இம்­மாத இறு­திக்­குள் கிட்­டத்­தட்ட 20,000 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் கொவிட்-19 தொற்­றி­லி­ருந்து முழு­மை­யா­கத் தேறி, பரா­ம­ரிப்பு வசிப்­பி­டங்­களில் இருந்து தங்­க­ளது தங்­கு­மி­டத்­திற்­குத் திரும்­பு­வர் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அடுத்த மாதத்­தில் இன்­னும் பல ஊழி­யர்­கள் கிரு­மித்­தொற்­றில் இருந்து குண­ம­டைந்து, வேலை செய்­யத் தயா­ரா­கி­வி­டு­வர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அமைச்­சர் வோங் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்று கூறி­னார்.

தங்­க­ளது தங்­கும் விடு­தி­க­ளுக்­குத் திரும்­பு­முன் அவர்­கள் கொரோனா தொற்­றி­லி­ருந்து முற்­றி­லும் மீண்­டு­விட்­டது உறு­தி­செய்­யப்­படும் என்­றும் அதற்­காக குரு­தி­நீ­ரி­யல் (சீரா­லஜி) சோத­னை­யு­டன் கூடிய பரி­சோ­தனை உத்தி கையா­ளப்­படும் என்­றும் கிரு­மித்­தொற்­றுக்­கான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வரான திரு வோங் விளக்­கி­னார்.

குரு­தி­நீ­ரி­யல் சோதனை முடி­வு­கள் நேர்­ம­றை­யாக இருந்­தால், அது அந்த ஊழி­யர்­கள் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு, அதி­லி­ருந்து அநே­க­மாக மீண்­டு­விட்­ட­தைக் குறிக்­கும் என அமைச்­சர் கூறி­னார்.

தங்­கும் விடு­தி­களில் தற்­போது நாளொன்­றுக்கு ஏறத்­தாழ 3,000 பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­படு­கின்­றன என்­றும் வரும் வாரங்­களில் அது அதி­க­ரிக்­கப்­படும் என்­றும் அமைச்­சர் வோங் தெரி­வித்­தார்.

கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை உறு­தி­செய்­யும் வித­மாக தங்­கும் விடு­தி­களில் உள்ள ஊழி­யர்­கள் அனை­வ­ருக்­கும் கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­தனை மேற்­கொள்ள அதி­கா­ரி­கள் கடப்­பாடு கொண்­டுள்­ள­னர் என்­றும் அவர் சொன்­னார்.

நிலைமை மேம்­பட்டு வரும் அதே வேளை­யில் பரி­சோ­த­னை­கள் தொடர்ந்து இடம்­பெற்று வரு­வ­தால் கிருமி பாதிப்பு எண்­ணிக்­கை­யும் அதி­க­மா­கவே இருக்­கும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார். நோய்த்­தொற்று அறி­குறி இல்­லா­தோ­ரி­ட­மும் நல்ல உடல்­ந­லத்­து­டன் இருப்­போ­ரி­ட­மும் கிரு­மித்­தொற்று சோத­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

ஊழி­யர்­கள் வேலைக்­குத் திரும்­பிய பின்­னும் மீண்­டும் கிருமி தொற்­றா­மல் தடுக்­கும் வகை­யில் குறிப்­பிட்ட கால இடை­வெ­ளி­யில் கிரு­மித்­தொற்­றுச் சோதனை மேற்­கொள்­ளப்­படும் என்­றும் திரு வோங் தெரி­வித்­தார்.

தொற்­றில் இருந்து மீண்ட ஊழி­யர்­கள் மீண்­டும் வேலைக்­குத் திரும்ப உத­வும் நோக்­கில் திட்­டங்­கள் வகுக்­கப்­பட்டு வரு­வ­தாக தங்­கும் விடு­தி­க­ளுக்­கான கிரு­மித்­தொற்­றுப் பணிக்­கு­ழு­விற்­குப் பொறுப்பு வகிக்­கும் பிரி­கே­டி­யர் ஜென­ரல் சீட் உய் லிம் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!