ஜூன் 1ல் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படலாம்

சிங்கப்பூர் சமூகத்தில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் வெகுவாகக் குறைந்திருப்பதன் மூலம், சிங்கப்பூரின் கிருமிப் பரவலை முறியடிக்கும் நடவடிக்கைகள் பலன் அளித்திருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதால், வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி நோய் முறியடிப்பு காலம் முடிவடையும்போது மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

முதலில் அத்தியாவசிய சேவைகளின் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் அதன் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் திரு கான் நேற்று நடைபெற்ற அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“ஜூன் 1ஆம் தேதி எல்லா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு அனைத்தும் முன்பு இருந்ததுபோல வழக்கநிலைக்குத் திரும்பிவிடும் என்று எதிர்பார்க்க வேண்டாம். கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது மிகவும் கவனமாகப் படிப்படியாக மேற்கொள்ளப்படும்,” என்றும் அமைச்சர் கான் வலியுறுத்தினார்.

இதுகுறித்து கருத்துரைத்த சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகளுக்கான இயக்குநர் இணைப் பேராசிரியர் கென்னத் மாக், “ஜூன் 1ஆம் தேதி முதல் கட்டுப்பாடு தளர்வுக்குப் பிறகு கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தால், கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் மேலும் தாமதமாக்கப்படலாம்.

“கிருமித்தொற்று சம்பவங்களைக் குறைவாக வைத்திருப்பதற்கு மீண்டும் நோய் முறியடிப்பு கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தும் சாத்தியமும் ஏற்படலாம்,” என்றார்.

“நோய் முறியடிப்பு காலம் முடிவடையும்போது எடுக்கப்படவிருக்கும் படிப்படியான நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பூர் திட்டமிட்டு வருகிறது. பாதுகாப்பு இடைவெளி குறித்த கட்டுப்பாடுகளை அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது.

“கிருமித்தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்காமல் இருந்தால் அதிலும் கட்டுப்பாடு தளர்வு அறிவிக்கப்படலாம்,” என்று பணிக் குழுவின் இணைத் தலைவரும் தேசிய வளர்ச்சி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

“உதாரணத்துக்கு, வெவ்வேறு இடங்களில் வசிக்கும் உடனடி குடும்ப உறுப்பினர்கள், ஒருவர் மற்றவரைச் சந்திக்க அனுமதிக்கலாமா என்றும் பரிசீலிக்கப்படக்கூடும். தங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க பலர் ஆவலுடன் இருப்பதை எங்களால் உணர முடிகிறது. ஆனால், இத்தகைய செயலால் முதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

“அவர்களுக்குக் கிருமித்தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகம் இருப்பதால், அவ்வாறு சந்திக்கும் செயல் அவர்களுக்கு ஆபத்தாகத் திரும்பக்கூடும். இதன் தொடர்பில் தகுந்த நடவடிக்கை குறித்து அரசாங்கம் முடிவெடுத்த பிறகு அறிவிக்கப்படும்,” என்றும் திரு வோங் விளக்கினார்.

இதற்கிடையே, கிருமித்தொற்று உள்ளவர்கள் குறித்து தவறான தகவல் வெளியானது பற்றி கருத்துரைத்த பேராசிரியர் மாக், “கிருமித்தொற்று பரிசோதனையை மேற்கொள்ளும் ஆய்வுக்கூடங்கள் அதற்குரிய முறையான வழிகளைப் பயன்படுத்துமாறு அவற்றுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை வெளியாக்கும் சோதனை முடிவுகள் சரியானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது,” என்று விவரித்தார்.

பொய்யான சோதனை முடிவு களைத் தெரிவித்த ஆய்வுக்கூடத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்றும் அது பயன்படுத்திய சோதனைக் கருவிகள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் பேராசிரியர் மாக் தெளிவுபடுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!