கட்டுப்பாடுகளுடன் வாடிக்கையாளர் கூட்டம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திறக்க ஒருசில கடைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி முடிதிருத்தகங்கள், பாரம்பரிய சீன மருந்தகங்கள் போன்றவை நேற்று திறந்தன.

வீட்டிலிருந்து கேக், பலகாரங்கள் செய்து விற்கும் வர்த்தகங்களும் நேற்று மீண்டும் தொடங்கின. கொவிட்-19 எனும் கொரோனா கிருமித்தொற்று காரணமாக மற்ற வர்த்தகங்களைப் போலவே இந்த வர்த்தகங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டத்தின்படி கடந்த மாதம் 22ஆம் தேதியிலிருந்து இந்த வர்த்தகங்கள் நிறுத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த வர்த்தகங்கள் நேற்று திறக்கப்பட்டபோது அவற்றின் முன் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். சில கட்டுப்பாட்டு நிபந்தனைகளுடன் திறக்க இக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வர்த்தகங்கள் சேஃப் என்ட்ரி எனும் மின்னிலக்கப் பதிவைப் பயன்படுத்த வேண்டும்.

அதைப் பயன்படுத்தி கடைகளுக்குள் வரும், அங்கிருந்து வெளியேறும் அனைத்து வாடிக்கையாளர்களின் விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். கடை ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இது பொருந்தும்.

ஒருவேளை தேவை ஏற்பட்டால் அங்கு வந்திருந்த அனைவரையும் அடையாளம் காண்பதற்கு இது உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, முடி திருத்தகங்கள் போன்ற மக்கள் நெருக்கமாக இருக்கக்கூடிய இடங்களில் சேஃப் என்ட்ரி மின்னிலக்கப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தீவெங்கும் உள்ள முடிதிருத்த கங்களுக்கு நேற்று பல வாடிக்கையாளர்கள் சென்றனர். கடைகளுக்கு முன் அவர்கள் பாதுகாப்பான தூர இடைவெளி விட்டு வரிசையில் நின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு சில சீனப் பாரம்பரிய மூலிகைக் கடைகள் அவற்றின் வாடிக்கையாளர்களைக் கடைகளுக்குள் விடவில்லை. மாறாக அவர்கள் கேட்கும் பொருட்களை வாசலிலேயே அவர்களிடம் விற்கும் உத்தியை அவை கையாண்டன. வியாபாரத்தை மீண்டும் தொடர்வது குறித்து வர்த்தகர்கள் பலர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!