வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 11,180க்கும் மேற்பட்ட பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவை சரக்குக் கொள்கலன் ஒன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்தன.

ஒட்டுமொத்தமாக ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான வரி செலுத்தப்படவில்லை. கடந்த 2ஆம் தேதியன்று அதிகாலை 6 மணி அளவில் புக்கிட் பாஞ்சாங் ஸ்கேனிங் நிலையத்தில் அந்த 20 அடி நீளமுள்ள கொள்கலனை அதிகாரிகள் சோதனையிட்டபோது அந்த சிகரெட்டுகள் சிக்கியதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.

கொள்கலனில் உள்ள பெட்டிகளை ஸ்கேன் செய்தபோது சந்தேகம் எழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!