சைனாடவுன் கைகலப்பு: மூவர் மீது குற்றச்சாட்டு

சைனாடவுன் குடியிருப்புக் கட்டடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்டதாக மூவர் மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டது. 20 வயதுடைய முகம்மது ஃபாரிட் சூரியான் மற்றும் நூர் நாஜாட் ஆல்வி ஆகியோருடன் 29 வயது முகம்மது ரோஸ்லான் ராம்லி மீதும் மரணம் விளைவிக்கக்கூடிய ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஃபாரிட், பீப்பள்ஸ் பார்க் சென்டரில் நடந்த சண்டையில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் சென்ற ஆண்டு மே மாதம் 16ஆம் தேதியன்று, சுவா சூ காங் குரோவில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் (மேற்கு) வளாகத்திற்குள் ஃபாரிட் அத்துமீறிச் சென்றதாகவும் அங்கு தாக்குதல் நடத்தவிருந்ததாகவும் கூறப்பட்டது. மூன்று சிங்கப்பூரர்களும் மத்திய போலிஸ் பிரிவில் தடுப்புக்காவலில் உள்ளனர். மீண்டும் இம்மாதம் 21ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் முன்னிலையாவர்.

இந்தக் கலவரத்துடன் தொடர்புடைய திரு ஸுக்ரி மற்றும் திரு இல்ஹாம் ஆகியோரை போலிசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!