‘சிக்கி’ அமைப்பில் எட்டு புதிய உறுப்பினர்கள்

கொவிட்-19 கிருமித்தொற்றால் தொழில்துறைகள் சிரமப்படும் இந்த காலகட்டத்தில் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபை (சிக்கி) அமைப்பிற்கு பணியாற்ற முன்வந்துள்ள தொழில் முனைவர்களுக்குத் தாம் கடமைப்பட்டிருப்பதாக நேற்றைய வருடாந்திர பொது கூட்டத்தில் குறிப்பிட்டார் டாக்டர் சந்துரு. எட்டு புதிய உறுப்பினர்களை வரவேற்ற அவர், இவர்களில் சிலர் நிதி, சட்டம், உத்திபூர்வ செயல்பாடு போன்ற முக்கிய அம்சங்களில் பல ஆண்டு அனுபவத்தைக் கொண்டவர்கள் என்று கூறினார்.

அமைப்பின் எதிர்கால செயல்பாடுகளுக்கும் உத்திபூர்வ அணுகுமுறைகளுக்கும் இவர்கள் பயனளிக்கக்கூடியவர்கள் என்றும் சொன்னார்.

அவர்களின் ஆலோசனையும் நிபுணத்துவமும் சிங்கப்பூரில் உள்ள தொழில் சமூகத்தை மேம்படுத்தும் சிக்கியின் உறுதியை மேலும் வலுப்படுத்தும். அத்துடன் உள்ளூர், வெளியூர் வர்த்தக சங்கங்கள், சபைகளுடன் ஆழமான உறவு களையும் தொடர்புகளையும் வளர்த்துக்கொள்ள உதவும் என்றார் டாக்டர் சந்துரு.

2020 முதல் 2022ஆம் ஆண்டுகளுக்கு உரிய இந்தக் கூட்டத்தை 79ஆம் முறையாக சிக்கி நடத்தியது. சிக்கியின் 96 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக இணையம் வழி நேரடி காணொளியின் மூலம் இந்த கூட்ட நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய இயக்குநர் பணிக்குழுவைச் சேர்ந்த ஒன்பது இயக்கு நர்கள் இரண்டாவது தவணைக் காலத்திற்குத் தங்களின் பணியைத் தொடர்வர். இவர்களுடன் புதிதாகச் சேர்ந்த எட்டு உறுப் பினர்களும் பணிக்குழுவில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தற்போது சிக்கி அமைப்பின் 17 உறுப்பினர்களும் போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

டாக்டர் டி.சந்துரு வெற்றிகரமாக இரண்டாம் முறையாக தலைவர் பதவியில் சிக்கியை வழி நடத்தவுள்ளார். கொவிட்-19 நோய் பரவல் உண்டாக்கியுள்ள நிச்சயமற்ற தற்போதைய காலச் சூழலில், சிக்கியின் உறுப்பினர்களுக்கும் தொழில் சமூகத்திற்கும் உதவ சிக்கி தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ‘ஸ்டியர்’ எனும் முயற்சியில் ‘எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அமைப்புடன் நெருக்க மாகச் செயல்படும் திட்டமும் தொழில்களுக்கு ஆதரவளிக்கும் இதர பல முயற்சிகளும் நேற்றையக் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!