செய்திக்கொத்து (சிங்கப்பூர்) 17.5.2020

சமூகத்தில் கிருமித்தொற்று அதிகரிக்கலாம்

நோய் முறியடிப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இன்னும் அதிகமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படுவதால், சமூகத்தில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இந்த அதிகரிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாமல் தடுக்கவும் தொடர்புகளின் தடங்களைக் கண்டறிதல், தனிமைப்படுத்தும் முயற்சிகள் ஆகியவை விரிவுப்படுத்தப்படும் என்றும் அவர் மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“நோய் முறியடிப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை கூடினால், மீண்டும் நோய் முறியடிப்பு கட்டுப்பாடுகள் சில அமல்படுத் தப்படலாம்,” என்றும் அவர் விவரித்தார்.


கட்டுமானத் துறை ஊழியர்களின் வீட்டில் தங்கும் உத்தரவு 18ஆம் தேதி முடிகிறது

கட்டுமானத் துறையில் உள்ள சுமார் 180,000 வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்போருக்கு விதிக்கப்பட்டிருந்த வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு நாளை இரவு மணி 11.59க்கு முடிவடைகிறது.

சமூகத்தில் உள்ளவர்களைப் போலவே இத்துறையில் உள்ளவர்களிடையே தொற்று மிகவும் குறைந்திருப்பதால், இந்த உத்தரவு நீட்டிக்கப்படாது என்று மனிதவள அமைச் சின் நிரந்தரச் செயலாளர் திரு ஆவ்பெக் காம் நேற்று முன் தினம் மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

“வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவிலிருந்து இவர்கள் விடு விக்கப்பட்டாலும் சமூகத்தில் உள்ள மற்றவர்களைப் போல இவர்களும் நோய் முறியடிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். உதாரணத்துக்கு, அவர்கள் தொடர்ந்து 28 நாட் களுக்கு வீட்டில் தங்கியிருந்ததால், தங்கள் தாயகத்துக் குப் பணம் அனுப்பதல் போன்ற குறிப்பிட்ட செயல்களை மேவ் கொள்ள வெளியில் செல்ல விரும்பக்கூடும். மின்னிலக்க முறையில் அதை செய்ய முடியவில்லை என்றால் அவர்கள் அதைச் செய்ய வெளியில் செல்லலாம். ஆனால், அதை முடித்தவுடன் உடனடியாக வசிப்பிடம் திரும்ப வேண்டும்,” என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறினார்.


1,275 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்து வசிப்பிடம் திரும்பினர்

கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பெற்ற வர்களில் 1,275 பேர் குணமாகி தங்கள் வசிப்பிடம் திரும்பி உள்ளனர் என்று சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் இரவு தெரிவித்தது. இதுவரை 7,239 பேர் கிருமித்தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்து விட்டனர்.

மெக்டோனல்ட்ஸ் உணவகம், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் கட்டுமானத் தளம் ஆகியவற்றில் கடந்த 28 நாட்களாகக் கொவிட்-19 சம்பவங்கள் இல்லை என்பதால் அவை இரண்டையும் கிருமித்தொற்று அல்லாத இடங்களாக சுகாதார அமைச்சு அறிவித்தது. 80 காக்கி புக்கிட் இன்டஸ் டிரியல் டெர்ரஸ், 48 தோ குவான் ரோடு ஈஸ்ட், 55 துவாஸ் சவுத் அவென்யூ 1, 119 துவாஸ் வியூ வாக் 1, துவாஸ் வியூ வாக் 2 ஆகிய மேலும் ஐந்து கிருமித்தொற்றுக் குழுமங் களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!