பொழுதுபோக்குக் கூடங்களில் உடல்வெப்ப சோதனைக்குப் பின்னரே அனுமதி திரையரங்குகளில் தள்ளித் தள்ளி அமருவது கட்டாயம்

திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் அவற்றுக்குச் செல்வோர் புதிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டி இருக்கும். ஒன்றாகச் சேர்ந்து படம் பார்க்கச் செல்வோர் திரையரங்குகளில் தள்ளித் தள்ளி அமருவதும் உல்லாசக் கூடங்களுக்குள் நுழையும்போது உடல்வெப்பநிலை சோதிக்கப்படுவதும் இனி கடைப்பிடிக்க வேண்டிய புதிய நடைமுறைகளில் சில.

கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடு களைப் படிப்படியாகத் தளர்த்தும் நாடுகளைப் போலவே சிங்கப்பூரிலும் திரையரங்கு போன்ற பொழுது போக்குக் கூடங்கள் பழைய வழக்கங்களைக் கொண்டிருக்காது.

திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டதும் புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்வது குறித்து அரசாங்க அதிகாரி களுடன் கலந்து பேசி வருவதாக ஷா தியேட்டர்ஸ், கோல்டன் வில்லேஜ், த புரோஜெக்டர் போன்ற திரையரங்கு நடத்துநர்கள் தெரிவித்து உள்ளனர்.

இது தொர்பாக ‘த புரோஜெக்டர்’ திரையரங்குக் குழுமத்தின் பொது மேலாளர் பிரஷாந்த் சோமசுந்தரம், 40, கூறுகையில், “உலக நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் திரையரங்குகள் எவ்வாறு எச்சரிக்கையுடன் மீண்டும் செயல்படுகின்றன என்பதைக் கவனித்து அதுபோல செயல்படுவது குறித்து யோசித்து வருகிறோம்” என்றார்.

“மீண்டும் திறக்கப்பட்டதும் தொழில் ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்து தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்துடனும் சிங்கப்பூரில் உள்ள பிற திரையரங்கு நடத்துநர்களுடனும் ஆலோசித்து வருகிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நடப்பில் இருக்கும் நேரத்தில் ஷா தியேட்டர்ஸ் போன்ற திரையரங்கு நடத்துநர்கள் திரையரங்குக் கூடங்களை முழுமையாகத் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஷா தியேட்டர்ஸ் சிங்கப்பூரில் ஒன்பது திரையரங்குகளை நடத்துகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக சிங்கப்பூரில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மார்ச் 28ஆம் தேதி மூட உத்தரவிடப்பட்டன. அவை மீண்டும் திறக்கப்பட்டதும் திரையரங்கினுள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பார்வையாளர்கள் அமருவதையும் உள்ளே நுழையும்போது உடல்வெப்பநிலை சோதிக்கப்படு வதையும் கட்டாயமாக்க ஷா தியேட்டர்ஸ் ஆயத்தமாகி வருகிறது.

அதேபோல சிங்கப்பூரில் 14 திரையரங்குகளை நடத்தி வரும் மற்றொரு திரையரங்கு நடத்துநரான கோல்டன் வில்லேஜ், 37.5 டிகிரி செல்சியஸ் உடல் வெப்ப நிலை உள்ளவர்களை திரையரங்கிற்குள் அனுமதிக்கப்போவதில்லை என்று கூறி வருகிறது.

முன்பதிவு செய்தவர்கள் திரையரங்கின் நுழைவாயிலில் அனுமதி மறுக்கப்பட்டால் அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!