28,000 சம்பவங்கள்: சமூக அளவிலான தொற்று ஒற்றை இலக்கம்தான்

சிங்கப்பூரின் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை நேற்று 28,000ஐ தொட்டது. புதிதாக 682 பேருக்குக் கிருமி தொற்றியதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,038 ஆனது. சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் நால்வர் நேற்றைய பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

எஞ்சியோரில் பலரும் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் என்றும் அவர்கள் அனைவரும் ‘ஒர்க் பெர்மிட்’டில் இங்கு வேலை செய்ய வந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது. 67 வயது முதியவர் மாண்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொவிட்-19 கிருமித்தொற்று மரண எண்ணிக்கை 22க்கு உயர்ந்துவிட்டது. ஏப்ரல் 7ஆம் தேதி கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் வெள்ளிக்

கிழமை உயிரிழந்தார்.

சமூக அளவிலான கிருமித்தொற்று சம்பவங்கள் ஒற்றை இலக்கத்துக்கு இறங்கியதைத் தொடர்ந்து அண்மையில் சில வர்த்தகங்கள் மீண்டும் தொடர அனுமதிக்கப்பட்டன. இருப்பினும் மெதுவாகவும் கவனமாகவும் மீட்சி பெறவேண்டிய அவசியம் இருப்பதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கடந்த வெள்ளிக்கிழமை எச்சரித்து இருந்தார்.

“நாம் கவனமிக்கவர்களாக இல்லாமல் போகும் சமயத்தில் சமூக அளவிலான கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. மேலும் புதிய கிருமித்தொற்று குழுமங்கள் உருவாகும் நிலையும் ஏற்படும்,” என்று அவர் தெரிவித்து இருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!