'கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் ஜூன் 1ஆம் தேதிக்குப் பின்னரும் தொடரும்'

தற்போது நடப்பில் உள்ள கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் ஜூன் 1ஆம் தேதிக்குப் பின்னரும் தொடரும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

இந்நிலைக்கு சிங்கப்பூரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் தம் ஃபேஸ்புக் பதிவில் நேற்று குறிப்பிட்டிருந்தார். கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டாலும் மக்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு இத்தொடர்ச்சி முக்கியம் என்று அவர் கூறினார்.

“கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முன்னர் இருந்த வாழ்க்கைக்குத் திரும்புவதாக இருக்காது,” என்றார் திரு வோங். வேலையிடங்கள், பள்ளிகள், சமூகச் சூழல்கள் ஆகியவற்றின் தொடர்பில் அனைவரும் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் கவனமான, அளவிடப்பட்ட அணுகுமுறையைப் பின்பற்றும் என்று அவர் சுட்டினார்.

கொவிட்-19 பரவலைச் சமாளிப்பதற்காக அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் தலைவர்களுள் அமைச்சர் வோங்கும் ஒருவர். பாதுகாப்பான முறையில் நடவடிக்கைகளை எவ்வாறு மீண்டும் தொடங்கலாம் என்று அரசாங்கம் அடுத்த கட்டத்திற்குத் திட்டமிடுபகிறது என்று கூறினார்.

“கிருமிப் பரவல் நடவடிக்கைகளிலிருந்து வெளியேறும்போது அது கட்டுப்படுத்தப்பட்டதாகவும் கட்டம் கட்டமாகவும் அமைந்திடும். அதற்கு நம் அனைவரிடமும் இருந்து பொறுமையும் கட்டொழுங்கும் தேவைப்படுகிறது,” என்றார். கிருமி மீண்டும் தலையெடுக்க நாம் விடக்கூடாது என்றும் நாம் நம் பங்கை ஆற்ற வேண்டும் என்றும் அவர் சொன்னார். இல்லையேல் இக்காலகட்டத்தில் நம் அனைவரின் முயற்சிகளும் தியாகங்களும் வீண் என்று அவர் கூறினார்.

முக்கியமான சில திட்டங்களை நிறைவேற்றுவதற்காக கட்டுமானத் துறை மீண்டும் இயங்கத் தொடங்குவதை அவர் சுட்டினார். ஜூன் மாதம் 2ஆம் தேதிமுதல் மிகக் கடுமையான பாதுகாப்பு அம்சங்கள் நடப்பில் இருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!