தைரியமாக இருங்கள்; பிரதமர் லீ வலியுறுத்தல்

மலாய்-முஸ்லிம் தலைவர்கள், சமூகத் தலைவர்களுடன் காணொளி வழியாக தாம் கலந்துரையாடியதாக பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முன்தினம் பகிர்ந்துகொண்டார்.

கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டங்களின் வழி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை குடும்பங்கள் எவ்வாறு சமாளிக்கின்றன என்பதை சமூகத் தலைவர்களிடம் பிரதமர் லீ கேட்டறிந்தார். நோன்புப் பெருநாள் நெருங்கி வரும் வேளையில், கொரோனா கிருமித்தொற்று காரணமாக வழக்கமாக களைகட்டும் கோலாகலமான கொண்டாட்டங்கள் இல்லாததைப் பிரதமர் சுட்டினார். நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவோருக்கு இது சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை தாம் அறிவதாக திரு லீ தெரிவித்தார்.

இம்மாதம் 24ஆம் தேதியன்று முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாட இருக்கின்றனர். ஆனால் கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் அடுத்த மாதம் 1ஆம் தேதியன்று நிறைவுபெறுகிறது. நோன்புப் பெருநாளை முன்னிட்டு உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகளுக்குச் செல்லக்கூடாது என்றும் ஒன்றுகூடல்களில் ஈடுபடக்கூடாது என்றும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) கடந்த வெள்ளிக்கிழமையன்று அறிவித்தது. அதுமட்டுமல்லாது ஹஜ்ஜு யாத்திரையை அடுத்த ஆண்டுக்கு சிங்கப்பூர் யாத்திரீகர்கள் தள்ளிப்போட வேண்டும் என்று முயிஸ் தெரிவித்தது. மலாய்-முஸ்லிம் தலைவர்கள், சமூகத் தலைவர்களுடன் காணொளி மூலம் பிரதமர் லீ நோன்புத் துறப்பில் கலந்துகொண்டார். “இந்த இக்கட்டான நிலையில் அன்புக்குரியவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள தியாகங்களைச் செய்துவருபவர்கள் தைரியமாக இருங்கள். ஒன்றிணைந்து நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பலனளிக்கின்றன,” என்று பிரதமர் லீ தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!