தாயும் மகனும் அருகருகில் இருந்து கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தனர்

கொவிட்-19 கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு மனங்குலைந்து இருந்த திருமதி பாண்டையாவிற்குத் தனிமைப்படுத்தப்பட்ட 'டி'ரிசோர்ட் @ டவுன்டவுன் ஈஸ்ட்' வளாகத்தில் தமது மகனே அவரது அறையில் தங்கவர இருந்த செய்தி மனதிற்கு சற்று ஆறுதலைத் தந்தது.

கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி திருமதி பாண்டையாவிற்கு கொவிட்-19 கிருமித் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவரது குடும்பத்தில் பாதிக்கப்பட்ட முதல் நபர் அவர்.

இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட அவர், பின்னர் பாசிர் ரிஸ் ரிசோர்ட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஏப்ரல் 8ஆம் தேதி அவரது மகன் ‌சிவம் பாண்டையாவிற்குக் கிருமித் தொற்று இருப்பது உறுதியானது.

சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தில் ரசாயண பொறியியல் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவரான சிவம், கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டுப் படிப்புக்காகச் சென்றிருந்தார்.

அங்கிருந்து மார்ச் 24ஆம் தேதி நாடு திரும்புமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் நான்கு நாட்கள் அனுமதிக்கப்பட்ட சிவம், பின்னர் சிங்கப்பூர் எக்ஸ்போ சமூகப் பராமரிப்பு வளாகத்தில் 20 நாட்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

கிருமித் தொற்று இருப்பதன் எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் பாசிர் ரிஸ் டி'ரிசோர்ட்டிற்கு அவர் அனுப்பப்பட்டார்.

34 நாட்களாக மகனைப் பார்க்காத அவரது தாயார் மகனை அவரது அறையிலேயே இருக்கச் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

இருவரும் சந்தித்தவுடன் கட்டிப் பிடித்து அரவணைக்க முடியவில்லை என்றாலும் ஆனந்த கண்ணீர் விட்டார் திருமதி பாண்டையா.

இருவரும் 11 நாட்கள் ஒன்றாக ஒரே அறையில் இருந்தனர்.

கடந்த 11ஆம் தேதி சிவம் வீடு திரும்பினார். திருமதி பாண்டையா கடந்த சனிக்கிழமை வீடு திரும்பினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!