மாதாந்தர பயணச் சலுகை அட்டைகளில் பயன்படுத்தப்படாத தொகை திருப்பித் தரப்படும்

எம்ஆர்டி, பேருந்துகளில் பயணம் செய்வோருக்கான மாதாந்தர பயணச் சலுகை அட்டைகளில் கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் நிறைவுபெறும் வரை பயன்படுத்தப்படாத தொகை திருப்பித் தரப்படும்.

கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் நீட்டிக்கப்பட்டதை அடுத்து இந்த மாதாந்தர பயணச் சலுகை அட்டைகளின் பயன்படுத்தப்படாத தொகையைத் திருப்பித் தருவதற்கான காலகட்டமும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகப் பொதுப் போக்குவரத்து பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் டிரான்சிட்லிங்க் நேற்று தெரிவித்தது.

கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் அடுத்த மாதம் 1ஆம் தேதி நிறைபெறுகிறது. இருப்பினும், பல கட்டுப்பாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 4ஆம் தேதிக்கு முன்பு, கடந்த மாதம் 4ஆம் தேதிக்கும் 21ஆம் தேதிக்கும் இடையிலான காலகட்டத்தில் தங்கள் மாதாந்தர பயணச் சலுகை அட்டைகளை வாங்கியோருக்கு பயன்படுத்தப்

படாத தொகை திருப்பித் தரப்படும்.

கடந்த மாதம் 4ஆம் தேதிக்கு முன்பு சலுகை அட்டைகளை வாங்கிய பயணிகளுக்கு கடந்த மாதம் 7ஆம் தேதிக்கும் அடுத்த மாதம் 1ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்துக்கான தொகை திருப்பித் தரப்படும். அல்லது அதற்கு முன்பு அட்டை காலாவதியாகிவிட்டால் காலாவதியாகும் தேதி வரையிலான தொகை திருப்பித் தரப்படும்.

மாணவர்களுக்கு கடந்த மாதம் 8ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 1ஆம் தேதி வரையிலான காலகட்டத்துக்கான தொகை திருப்பித் தரப்படும்.

கடந்த மாதம் 4ஆம் தேதிக்கும் 21ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சலுகை அட்டைகளை வாங்கிய பயணிகளுக்கு சலுகை அட்டையை பயன்படுத்தாத நாட்களை அடிப்படையாகக் கொண்டு அதற்கான தொகை திருப்பித் தரப்படும்.

திருப்பிக் கொடுக்கப்படும் தொகையை அடுத்த மாதம் 2ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் பயண அட்டைகளில் பணம் நிரப்பும் அனைத்து இயந்திரங்களிலோ அல்லது டிரான்சிட்லிங்க் கூடத்திலோ பெற்றுக்கொள்ள முடியும். திருப்பிக் கொடுக்கப்படும் தொகை போக்குவரத்து மின் பற்றுச்சீட்டுகளாக தரப்படும்.

திருப்பித் தரப்படும் தொகையைப் பயன்படுத்தி புதிய பயணச் சலுகை அட்டைகளை வாங்க விரும்புவோர் பயணச் சீட்டு அலுவலகம் அல்லது சலுகை அட்டை மாற்றும் அலுவலகத்துக்குச் செல்லலாம் என்று டிரான்சிட்லிங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணச் சலுகை அட்டை மாற்றும் அலுவலகங்கள் அட்மிரல்டி, புக்கிட் பாஞ்சாங், சாமர்செட் எம்ஆர்டி நிலையங்களிலும் அங் மோ கியோ, சுவா சூ காங், ஹவ்காங், ஜூரோங் ஈஸ்ட், தெம்பனிஸ் ஆகிய வட்டாரங்களில் உள்ள பேருந்து நிலையங்களிலும் உள்ளன.

போன விஸ்தாவில் இருக்கும் பயணச் சலுகை அட்டை மாற்றும் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!