டெங்கி நோயாளிகளுக்கு கொசுவிரட்டி போத்தல்கள் இலவசம்

டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவர்களால் சந்தேகப்படுவோருக்குப் பலதுறை மருந்தகங்கள், பொது மருந்தகங்கள் மூலமாக 300,000க்கும் அதிகமான கொசுவிரட்டி போத்தல்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

டெங்கி பாதிப்பு இருப்பதாகச் சந்தேகப்படுபவர்கள் அவற்றைத் தொடர்ந்து தங்களது உடலில் பூசி வருமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர். அப்படிச் செய்வதன்மூலம் அவர்கள் தங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு டெங்கி தொற்றுவதைத் தடுத்து, அந்நோய்ப் பரவலை முறியடிக்க உதவலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்து இருக்கிறது.

சிங்கப்பூரில் ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் டெங்கித் தொற்று வழக்கமாக உச்சநிலையில் இருக்கும். இந்த நிலையில், இம்மாதத் தொடக்கம் முதலே 30 மி.லி. அளவிலான கொசுவிரட்டி போத்தல்கள் பலதுறை மருந்தகங்களுக்கும் பொது மருந்தகங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுவிட்டன.

இப்படி கொசுவிரட்டி வழங்கப் படுவது இது முதன்முறையல்ல. கடந்த 2013ஆம் ஆண்டில் 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட கொசு விரட்டி போத்தல்கள் வீட்டுரிமையாளர்களிடம் வழங்கப்பட்டன. டெங்கி குழுமங்களில் இருந்த பள்ளிகளிலும் மாணவர்களுக்குக் கொசுவிரட்டி வழங்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமையுடன் முடிந்த வாரத்தில் புதிதாக 529 பேர் டெங்கித் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் வாரத்திற்குச் சராசரியாக 300 முதல் 400 டெங்கித் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

இந்தக் காலகட்டத்தில் கொசுப் பெருக்கம் இருக்கிறதா என தீவு முழுவதும் கிட்டத்தட்ட 310,000 சோதனைகளை வாரியம் மேற்கொண்டது. அதன்மூலம் 6,400க்கும் மேற்பட்ட இடங்களில் கொசு இனப்பெருக்கம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!