உள்ளூர் சமூகத்தில் மீண்டும் ஒருவர் மட்டுமே பாதிப்பு நோயாளிகளைவிட தேறியோர் அதிகம்

சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 451 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட் டோரின் மொத்த எண்ணிக்கை 28,794 ஆனது. மேலும், இவர் களில் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி ஒருவர் மட்டுமே இடம்பெற்றிருப்பதாக சுகாதார அமைச்சின் நேற்றைய முதற்கட்ட அறிவிப்பு தெரிவித்தது.

ஏப்ரல் 7ஆம் தேதி நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கை கள் நடப்புக்கு வந்த பின்னர் உள்ளூர் சமூகத்தில் ஒரே ஒருவர் கிருமித்தொற்றுக்கு ஆளாவது இது இரண்டாவது முறை. கடந்த வாரம் வெள்ளிக் கிழமையும் ஒருவரே பாதிக்கப் பட்டோர் பட்டியலில் இடம்பெற்று இருந்தார். புதிதாக நேற்று அறி விக்கப்பட்ட நோயாளிகளில் வழக்கம்போல தங்கும் விடுதி களிலுள்ள வெளிநாட்டு ஊழி யர்களே நிறைந்திருந்தனர்.

சிங்கப்பூரின் கொவிட்-19 கிருமித் தடுப்பு நிலவரம் முன்னேற்றம் கண்டு வருவதையே அண்மைய அன்றாட எண்ணிக்கை உணர்த்துகிறது. குறிப்பாக, கடந்த ஆறு நாட்களாக புதிய நோயாளிகளைக் காட்டிலும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

மேலும், தங்கும் விடுதிகள் அல்லாத பகுதிகளில் கடந்த வாரம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரு வாரங்களுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் குறைவு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!